புளிச்சமாவு படத்தை எடுத்துட்டு பேச்சப் பாரு... வாரிசு இயக்குனரை வம்பிழுக்கும் ப்ளு சட்டை
வாரிசு படத்தின் இயக்குனர் வம்சியை கிண்டலடித்து சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளார்.

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. ரிலீசானது முதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வந்தாலும், விமர்சன ரீதியாக சில சறுக்கல்களை சந்தித்த வண்ணம் உள்ளது. அதில் ஒன்று தான் இப்படம் மெகா சீரியல் போல் இருக்கிறது என்கிற விமர்சனம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வம்சி, வாரிசு படத்தை சீரியல் போல் இருப்பதாக விமர்சித்தவர்களை கடுமையாக சாடி இருந்தார். படம் எடுப்பது ஒன்றும் ஜோக் கிடையாது. அதற்கு பின்னால் எத்தனை பேருடைய கடின உழைப்பும், தியாகமும் இருக்கிறது தெரியுமா? சீரியல்களை ஏன் மிகவும் மட்டமாக பேசுகிறீர்கள்? சினிமா மற்றும் சீரியல் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... அத்துமீறி நடந்துகொண்ட கல்லூரி மாணவனுக்கு நடிகை அபர்ணா பாலமுரளி கொடுத்த அல்டிமேட் பதிலடி - வைரல் வீடியோ
அவரின் இந்த பேச்ச்சை கிண்டலடித்து சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளார். வம்சியை sacrifice star என்று கிண்டலடித்து பதிவிட்டுள்ள அவர், உண்மைய சொன்னா பயங்கரமா கொந்தளிக்கராறே? நாட்ல நீங்க மட்டும்தான் உழைக்கறீங்களா? மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? போதாக்குறைக்கு தியாகம் வேற பண்றாங்களாம். சீரியல் மாதிரி இருக்குன்னு சொன்னது ஒரு குத்தமா?” என சாடி உள்ளார்.
மற்றொரு பதிவில், “ஜேம்ஸ் காமரூன், ஸ்பீல்பெர்க் கூட தியாகம், ஹார்ட் ஒர்க்ன்னு புல்லரிக்கல. இந்த க்ரீன்மேட், கேரவன் செட்டப்போட, ஆப்பிள் ஜூஸ் குடிச்சிட்டு, பலகோடி சம்பளமும் வாங்கிட்டு புளிச்சமாவு படம் எடுக்கறவங்க பேசுறாங்க பாரு பேச்சு.. 'ரத்தம் சிந்தி உழைக்கறோம், தியாகம் பண்ணுறோம்' என இயக்குனர் வம்சியை வம்பிழுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை.
இதையும் படியுங்கள்... சர்ப்ரைஸாக 50-வது பட அறிவிப்பை வெளியிட்ட தனுஷ் - இயக்கப்போவது யார்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.