- Home
- Cinema
- அஜித்துக்கும்...அண்ணாமலைக்கும் ஒரே எண்ணம் தான்...ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட பாஜாக பிரபலம்..
அஜித்துக்கும்...அண்ணாமலைக்கும் ஒரே எண்ணம் தான்...ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட பாஜாக பிரபலம்..
நடிகர் அஜித்தின் மேனேஜர் பதிவை மாரு பதிவு செய்த பாஜக நிர்வாகி, அண்ணாமலைக்கும், அஜித்துக்கும் ஒரே எண்ணம் தான் என குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ajithkumar
நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வலிமை படத்தில் நடித்திருந்தார். வினோத் இயக்கிய இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்ததோடு ரூ. 200 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணியில் இணைந்துள்ள அஜித் 61வது படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படப்புகழ் மஞ்சு வாரியர் இவர்களுடன் ஜான் கோக்கன், நடிகர் வீராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
AJITH 62
பின்னர் விக்னேஷிஷிவன் இயக்கத்தில் உருவாகும் அஜித் 62 படத்தில் அப்டேட் ஏற்கனவே வந்து விட்டது. லைக்கா தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் இணைவார் என சொல்லப்படுகிறது.
AJITH
இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு கணவன் மனைவி ஜோடி கழுதையை வைத்து எது செய்தாலும் அதை பார்பவர்கள் எதாவது ஒரு கருத்து கூறிக்கொண்டே இருப்பார்கள். நான் எது செய்தாலும் உலகம் பேசிக்கொண்டே தான் இருக்கும், எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது என்ற கருத்தை அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தோடு இதன் பொருட்டு தொடர்பு உடையவருக்கு! நிபந்தனையற்ற அன்பு.அஜித் என குறிப்பிட்டிருப்பது ஒருவேளை விக்னேஷ் சிவன் அல்லது சிறுத்தை சிவா இவர்களுடன் அஜித் இணைந்திருப்பது குறித்து இருக்குமோ என பேசப்படுகிறது.
ajith kumar
இந்நிலையில், அஜித்தின் அந்தப் பதிவு தற்போது தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுத் தலைவராக உள்ள அமர்பிரசாத் ரெட்டி, அஜித்தும் அண்ணாமலையும் உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள் எனக் கூறியுள்ளார். மேலும் தேவையற்ற விமர்சனங்களால் திசை திரும்பாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான சிந்தனைகளைக் கொண்ட கதைகளை அஜித்தும் அண்ணாமலையும் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.