ஹனிமூனில் இப்படியா? ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு பிகினியில் படு மோசமாக போஸ் கொடுக்கும் வித்யுலேகா ராமன்..!
காமெடி நடிகை வித்யுலேகா ராமன் (Vidyulekha Raman), சமீபத்தில் அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது மாலத்தீவில் தன்னுடைய ஹனி மூனை (Honey moon Photos) தாறுமாறாக கொண்டாடி வருகிறார். இதுகுறித்த சில புகைப்படங்களை அவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா - ஜீவா நடிப்பில் வெளியான 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்து தெலுங்கிலும் பிரபலமானார்.
இந்த படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கினார்.
vidyulekha raman
பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். சிறந்த காமெடி நடிகைக்கான பல விருதுகளை இவருக்கு தெலுங்கு திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் வித்யுலேகா ராமன், கடந்த வருடம் ஃபிட்னெஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதை தொடர்ந்து இவர்களது திருமணம் சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், தற்போது வித்யுலேகா ராமன்... ஹனி மூனுக்காக மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து இவர் படு மோசமான பிகினி உடையில் வெளியில் வெளியிட்டுள்ள புகைப்படம், நெட்டிசன்களுக்கு மத்தியில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
இவரது லேட்டஸ்ட் ஹனி மூன் புகைப்படங்கள், அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இவர் பிகினி உடை புகைப்படம் விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தாலும், மற்ற புகைப்படங்களில் மாடர்ன் லுக்கில் கெத்து காட்டியல்லர்.
ஹனி மூனுக்காக சென்ற வித்யுலேகா, கணவருடன் சேர்ந்து புகைப்படம் வெளியிடாமல்... தன்னை மட்டுமே போகஸ் செய்து அனைத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.