MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பட்ஜெட் 45 கோடி; ஆனா வசூல் 1 லட்சம் தான்! தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட இந்த படம் பற்றி தெரியுமா?

பட்ஜெட் 45 கோடி; ஆனா வசூல் 1 லட்சம் தான்! தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட இந்த படம் பற்றி தெரியுமா?

India's Biggest Flop Movie : ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.1 லட்சம் மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 04 2024, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Biggest Flop Movie

Biggest Flop Movie

ஒவ்வொரு நடிகரும்.. தனது படம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். இயக்குனர் தயாரிப்பாளர்களும் அதையே மனதில் வைத்து தான் படத்தை எடுப்பார்கள், அதற்காக உயிரைக் கொடுத்து உழைக்கக்கூடிய நடிகர்களும் இங்கு இருக்கிறார்கள். படத்திற்காக அவர்கள் செய்த முதலீட்டில் இரு மடங்கு லாபம் கிடைக்க வேண்டும் என்கிற முனைப்பில் தான் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கிறார்கள். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது போல் படத்தை பார்த்து பார்த்து ரிலீஸ் செய்வார்கள். ஆனால் சில சமயங்களில் ஒரு படம் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்டாலும்.. அது தோல்வியடைந்துவிடும்.

25
The Lady Killer

The Lady Killer

அப்படி ஒரு படத்தை பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம். ரூ.45 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம்  வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே வசூலித்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அந்தப் படத்தின் பெயர் தி லேடி கில்லர். இப்படம் வெறும் ஒரு லட்சம் மட்டுமே வசூலித்தது. ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் வெறும் ஆயிரத்துக்கும் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆனது. பாலிவுட்டில் மிகப்பெரிய தோல்வி படமாக இது உள்ளது.

இதையும் படியுங்கள்... தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்பட்ட தளபதியின் டாப் 10 ஹிட் மூவீஸ் & கழுவி ஊற்றப்பட்ட டாப் 10 பிளாப் படங்கள் இதோ

35
Bhumi pednekar

Bhumi pednekar

அஜய் பெல் இயக்கியுள்ள க்ரைம் த்ரில்லர் படமான இதில் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பூமி பெட்னேகர் நடித்திருந்தார். இந்தப் படம் தயாரிப்புப் பணிகளின்போதே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. இறுதியாக நவம்பர் 2023 இல் வெளியிடப்பட்டது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாகவே வசூலித்தது. 

லேடி கில்லர் சில திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. இந்தப் படத்திற்கு முதல் நாளில் வெறும் 293 டிக்கெட்டுக மட்டுமே விற்பனையானது. அதிலிருந்து ரூ.38,000 மட்டுமே வசூலாகியுள்ளது.  சுவாரஸ்யம் என்னவென்றால், படத்தின் மொத்த வசூல் ரூ.1 லட்சத்தை தாண்டவில்லை.
 

45
The LadyKiller Box Office

The LadyKiller Box Office

லேடி கில்லர் தயாரிப்பாளர்கள் ரிலீசுக்கு முன்பே ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்தனர். ஊடக அறிக்கைகளின்படி, இந்தப் படம் டிசம்பர் இறுதியில் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டது. நேரடி ஓடிடி வெளியீட்டைத் தவிர்க்கும் ஒப்பந்தத்தின் காரணமாக, படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் படம் 4-6 வார திரையரங்கு வெளியீட்டுக்கு நவம்பர் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது,

டிஜிட்டல் உரிமைகள் மூலம் வசூல் முக்கியம் என்பதால், முழுமையடையாத படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். இந்த விஷயம் இயக்குனருக்கு கூட தெரியாது என்று அப்போது சர்ச்சை எழுந்தது.

55
The LadyKiller Disaster in Box Office

The LadyKiller Disaster in Box Office

ஆனால் சோகம் என்னவென்றால், படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த பிறகு, ஓடிடி தளம் ஓடிடி வெளியீட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. படம் முழுமையடையாமல் திரையரங்குகளில் வெளியானதால் டிஜிட்டல் வெளியீடும் கடினமாகியது. இதுவரை லேடி கில்லர் திரைப்படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. மொத்தத்தில் இப்படம் மிகப்பெரிய தோல்வி படம் என்கிற பெயரை எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்... சுச்சி லீக்ஸால் கோலிவுட்டையே கதிகலங்க வைத்தவர்; யார் இந்த சுசித்ரா? அந்தரங்க விஷயங்களை அவிழ்த்துவிட்டது ஏன்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image2
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image3
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved