பிக்பாஸ் வனிதாவுக்கு நடிகர் சஞ்சீவுக்கும் இடையே ஒரு உறவு முறையா? இதுநாள் வரைக்கும் தெரியாம போச்சே..!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் தன்னுடைய அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ள, வனிதா விஜயகுமார் பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவுக்கும் தனக்கும் உள்ள உறவு முறை குறித்து முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் வனிதா தற்போது உறவினர் திருமண விசேஷம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த திருமணத்தில் தன்னுடைய உறவினர்கள் மற்றும், நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதிலும் தற்போது உடல் எடையை குறைந்து செம்ம ஸ்லிம் பிட்டாக மாறியுள்ள இவர், சில அசரவைக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த திருமணத்தில் பிரபல நடிகை சீதாவும் கலந்து கொண்டுள்ளார். அவருடன் வனிதா எடுத்து கொண்ட புகைப்படம் இதோ...
அதே போல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அடுத்த வனிதாவாக பார்க்கப்பட்ட சுரேஷ் சக்ரவர்தியும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இந்த விசேஷத்தின் போது பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவுடனும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
சஞ்சீவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தங்களுக்குள் இருக்கும் உறவு முறை குறித்து தெரிவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார் வனிதா.
சஞ்சீவ் வனிதாவின் சொந்த பெரியம்மா மகனாம். அதாவது, வனிதாவின் தாயார் மஞ்சுளாவின் உடன் பிறந்த சகோதரி, ஷியாம்லாவின் மகனாம். எனவே சஞ்சீவ் தன்னுடைய சகோதரர் என கூறியுள்ளார்.