- Home
- Cinema
- Biggboss Ultimate : இந்த வாரம் அனிதா எஸ்கேப்பா! அப்போ பிக்பாஸில் இருந்து ஜூட் விடப்போவது இவர்தானா?
Biggboss Ultimate : இந்த வாரம் அனிதா எஸ்கேப்பா! அப்போ பிக்பாஸில் இருந்து ஜூட் விடப்போவது இவர்தானா?
Biggboss Ultimate : சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேற உள்ள பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஓடிடி பிக்பாஸ்
ஓடிடி-க்கென பிரத்யேகமாக நடத்தப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை முதல் மூன்று வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர் அவர் படப்பிடிப்பு பணிகள் காரணாமாக விலகியதால், அவருக்கு பதில் கடந்த 3 வாரங்களாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
எலிமினேஷன் எப்படி நடக்கும்?
பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வாரம் ஒருவரை வெளியேற்றும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஹாட்ஸ்டார் தளத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
எவிக்ஷன் லிஸ்ட்
அந்த வகையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில், ஜுலி, தாமரை, நிரூப், அனிதா, சதீஷ், சுருதி ஆகியோர் உள்ளனர். இதில் அதிக வாக்குகளைப் பெற்று ஜூலி முதல் இடத்தில் உள்ளார். தாமரை இரண்டாவது இடத்திலும், நிரூப் மூன்றாவது இடத்திலும், சதீஷ் நான்காவது இடத்திலும் உள்ளனர். கடைசி இரண்டு இடத்தில் அனிதா மற்றும் சுருதி உள்ளனர்.
வெளியேறப்போவது யார்?
அனிதா கடந்த வாரம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்களிடையே வெறுப்பை சம்பாதித்ததால் அவர் தான் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுவார் என பிக்பாஸ் ரசிகர்கள் யூகித்து வந்த நிலையில், அவர் சுருதியை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளதால், இந்த வாரம் சுருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... சூர்யா - ஜோ லிஸ்டில் இணையும் பிரபல நடிகர்-நடிகை... காதலுக்கு ஓகே சொன்ன குடும்பத்தினர்- விரைவில் டும் டும் டும்