பிக்பாஸ் ஷிவினா இது? நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள பெற்ற ஷிவினின் லேட்டஸ்ட் போட்டோர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக இங்கு வாழ முடியாது என்று கருதி சிங்கப்பூரில் நல்ல வேலை பார்த்துவந்த ஷிவின் அந்த வேலையை விட்டு தனது பாலினத்திற்காக ஓடி ஒளியவேண்டாம் என்று கருதி மீண்டும் இந்தியா திரும்பினார். மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வமிருந்த ஷிவினுக்கு கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவின், தனது நடவடிக்கைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. கடந்த சீசனில் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3-வது இடம் பிடித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திரைப்படங்களில் திருநங்கை கதாப்பாத்திரத்திற்கு ஆண்களை நடிக்க வைப்பதற்கு பதில், நடிப்பில் ஆர்வமாக திருநங்கைகளையே நடிக்க வைக்கலாம் என்று அவர் கூறி வருகிறார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறக்கு அவருக்க்கு பெரியளவில் பட வாய்ப்புகள் இன்னும் வரவில்லை.
முன்னதாக 2021-ம் ஆண்டு ஸ்பெயின் நடைபெற்ற மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் ஷிவின். அதன்பிறகே விளம்பரம் மற்றும் மாடலிங் துறையில் ஷிவினுக்கு வாய்ப்பு கிடைத்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவின் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் போட்டோக்களையும் ஷிவின் பகிர்ந்து வருகிறார்.
ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்... முன்னாள் காதலன் கவினின் திருமணம் பற்றி மனம்திறந்த லாஸ்லியா
அந்த வகையில் ஷிவினின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் நடிகைகளை மிஞ்சும் வகையில் கிளாமர் உடையில் போட்டோஷூட் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.