BiggBoss Tamil 5: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவரா? வெளியான ஷாக்கிங் தகவல்!!
விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் (Biggboss tamil 5) இருந்து இந்த வாரம் வெளியேற உள்ள போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி துவங்கப்பட்டது. தற்போது 45 நாட்களை நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், பல எதிர்பாராத சம்பவங்களும் முட்டல் மோதங்கள் நடந்து வருகிறது.
ஆரம்பத்தில், அன்பை பொழிந்த போட்டியாளர்கள் கடந்த சில வாரங்களாக கடும் சண்டை போட்டு கொண்டு இருப்பதையும், பீப் போடும் அளவிற்கு பேசுவதையும், வாய்ப்பேச்சு கை கலப்பு வரை செல்வது போல் நடந்து கொள்வதையும் பார்க்க முடிந்தது.
அதே நேரம் தங்களுடைய பெயர் கெட்டு போய் விட கூடாது என்பதில் கொஞ்சம் தெளிவாகவும் உள்ளனர். இவர் உண்மை தன்மையை விட, நடிப்பு தான் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவே பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பாவனி, இமான் அண்ணாச்சி, அபினய், சிபி, தாமரை செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் அக்ஷரா ரெட்டி ஆகிய 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் ஆரம்ப நாளில் இருந்தே நாமினேஷன் லிஸ்லிட்டில் இடம்பிடித்து, நூலிழையில் எலிமினேஷனுக்கு செல்லாமல் தப்பித்து வரும், அபிநய் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் வாண்டடாக தன்னுடைய பெயரை கெடுத்து கொண்ட தொட்டா சினிங்கி இசை வாணி வாரம் பல்வேறு விமர்சனங்களை தான் இந்த வாரம் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை பிக்பாஸ் ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்களுடைய கணிப்பு படி ஒவ்வொரு வாரமும் கூறியது போலவே போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரம் இசை வாணி வெளியேறுவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.