- Home
- Cinema
- BiggBoss Pavani reddy : சிம்பு கூப்பிட்டா உடனே போயிடுவேன்... பிக்பாஸ் பாவனி ரெட்டி சொல்கிறார்
BiggBoss Pavani reddy : சிம்பு கூப்பிட்டா உடனே போயிடுவேன்... பிக்பாஸ் பாவனி ரெட்டி சொல்கிறார்
BiggBoss Pavani reddy : சமீபத்தில் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனியிடம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ்வும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
பாவனியும்... சர்ச்சைகளும்
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்த போட்டியாளர் என்றால் அது நடிகை பாவனி தான். முதலில் காயின் டாஸ்கின் போது தொடங்கிய சர்ச்சை, பின்னர் அபிநய் உடனான காதல், அமீர் உடனான முத்த சர்ச்சை என இறுதிவரை நீண்டுகொண்டே சென்றது. இந்த சர்ச்சைகளையெல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாவனி, மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார்.
கணவர் மரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்னரே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்றே மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்.
பிக்பாஸ் வாய்ப்பு
கணவரின் இறப்பைத் தாங்கி கொள்ள முடியாமல் தவிந்து வந்த பாவனி, சில ஆண்டுகள் நடிப்பை விட்டு விலகி இருந்தார். பின்னர் அதிலிருந்து படிப்படியாக மீண்டு, சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடிக்கத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்திய பாவனிக்கு. அடுத்ததாக பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து. தற்போது அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ரசிகர் வட்டமும் பெரிதாகி உள்ளது.
சிம்பு குறித்து பாவனி
இந்நிலையில், சமீபத்தில் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனியிடம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாவனி, “நான் ஏன் இந்த டைம்ல போகலனு தோனுது, மறுபடியும் கூப்டா கண்டிப்பாக சிம்வுக்காக நான் போவேன். அச்சசோ.. இந்த நேரத்துல பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்திருக்கலாமேனு தோனுச்சு. இந்த முறை மிஸ் பண்ணிட்டேன். அடுத்தவாட்டி சிம்பு ஹோஸ்ட் பண்ணும்போது எனக்கும் சான்ஸ் கொடுங்கனு கேட்பேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... cuckoo movie actor : வறுமையால் பிளாட்பார்மில் தங்கும் குக்கூ பட நடிகர்.. பாட்டுப்பாடி பிச்சை எடுப்பதாக கண்ணீர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.