MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் கவின் நடித்த டாடா படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் - புது ரிலீஸ் தேதியை அறிவித்தது ரெட் ஜெயண்ட்

பிக்பாஸ் கவின் நடித்த டாடா படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் - புது ரிலீஸ் தேதியை அறிவித்தது ரெட் ஜெயண்ட்

டாடா படத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழு, தற்போது திடீரென ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 23 2023, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். அந்நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பிக்பாஸுக்கு பின் இவர் நடித்த முதல் படம் லிப்ட். இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு பின் அவர் ஹீரோவாக நடிக்க கமிட் ஆன படம் டாடா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஒலிம்பியா நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். மலையாள நடிகையான இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இதன் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதையும் படியுங்கள்... முதல் படமே எடுக்கல, அதற்குள் 2-வது படத்துக்கு பூஜையா? கிரவுடு ஃபண்டிங் பணம் என்னாச்சு? கோபி, சுதாகர் விளக்கம்

34

டாடா படத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழு அதுகுறித்த அறிவிப்பையும் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றி உள்ளது படக்குழு. வருகிற பிப்ரவரி 10-ந் தேதி டாடா படம் ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

44

டாடா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதற்கு துணிவு மற்றும் வாரிசு படங்களும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு ரிலீஸான இந்த இரண்டு படங்களும் இரண்டு வாரங்களைக் கடந்தும் மவுசு குறையாமல் தியேட்டர்களில் ஓடி வருவதால், டாடா படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 10-ந் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... கதாநாயகி ஆனதும் கூடிய அழகு... இளசுகளை கவர்ந்திழுக்கும் குட்டி நயன் அனிகாவின் அசத்தல் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved