- Home
- Cinema
- BiggBoss Thamarai : ‘பிக்பாஸ் 5’ முடிஞ்சும் இன்னும் சம்பளம் தரல.... அல்டிமேட் ஷோவில் ஓப்பனாக போட்டுடைத்த தாமரை
BiggBoss Thamarai : ‘பிக்பாஸ் 5’ முடிஞ்சும் இன்னும் சம்பளம் தரல.... அல்டிமேட் ஷோவில் ஓப்பனாக போட்டுடைத்த தாமரை
பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்று கலக்கிய தாமரைச் செல்வி, தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் இந்நிகழ்ச்சியை அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச் செல்வி, பைனலுக்கு முன் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிகச்சியில் இருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கி உள்ளது. அதன்படி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார் தாமரை. கடந்த வாரம் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தாமரை செல்வியுடன், சக போட்டியாளரான தாடி பாலாஜி பேசுகையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்தால், அதை சம்பளத்தில் பிடித்து விடுவார்கள் எனக் கூறினார். இதைக்கேட்டு ஷாக் ஆன தாமரை, எனக்கு தான் இன்னும் சம்பளமே தரலயே என தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடிந்து 2 வாரத்துக்கு மேல் ஆகியும் சம்பளம் தராதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்காக தாமரைச் செல்விக்கு ஒரு வாரத்துக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 14 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால், அவருக்கு மொத்தம் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட்டிலும் அவருக்கு இதே தொகை தான் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.