MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Shivani new movie : குவியும் பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போன ஷிவானி.... கைவசம் இத்தனை படங்களா?

Shivani new movie : குவியும் பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போன ஷிவானி.... கைவசம் இத்தனை படங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, நடிகை ஷிவானிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. 

1 Min read
Author : Ganesh A | Asianet News
| Updated : Jan 21 2022, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி, இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

25

இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷிவானி மேலும் இப்படம் மூலம் அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். 

35
shivani narayanan latest

shivani narayanan latest

இதுதவிர வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகை ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். 

45

இதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீட்ல விசேஷங்க’ என்கிற படத்தில் ஷிவானி ஹீரோயினாக நடித்துள்ளார். இது பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

55

இந்நிலையில், நடிகை ஷிவானி மேலும் ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். பம்பர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை செல்வகுமார் இயக்குகிறார். கேரளா லாட்டரியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஜீவி பட நாயகன் வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார்.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved