சேலையில் படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட பிக்பாஸ் லாஸ்லியா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை லாஸ்லியா, தற்போது சேலையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கவினை காதலித்த லாஸ்லியா, வெளியே வந்ததும் அவரை பிரேக் அப் செய்து பிரிந்தார்.
கவின் உடனான பிரேக் அப்பிற்கு பின் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய லாஸ்லியா, பிரெண்ட்ஷிப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து தன்னுடைய சக பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இரண்டு படங்களும் படு தோல்வியை சந்தித்தன.
இதையும் படியுங்கள்... மாஸ்க்கை கழட்டியதும் மரியாதை கொடுத்தார்கள்... விமான நிலையத்தில் நடந்த கொடுமையை விவரித்த சித்தார்த்
இதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட லாஸ்லியா, சட்டென கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் லாஸ்லியா. பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தான் அவர் இவ்வாறு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், தற்போது கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையும், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து அவர் நடித்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாக பரவி வருகின்றன. குஷி ஜோதிகாவை மிஞ்சும் விதமாக லாஸ்லியாவின் இந்த போட்டோஷூட் அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 'தசாவதாரம்' கமல்ஹாசனை மிஞ்சிய சூர்யா..! 42-வது படத்தில் 13 கெட்டப்பில் நடிக்கிறாரா?