BiggBoss 5 Tamil : பிக்பாஸில் தாமரையின் பேச்சைக் கேட்டு கடுப்பான ரசிகர்கள் - அப்படி என்ன சொல்லிட்டாங்க?
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது, தற்போது ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், பாவனி, தாமரைச் செல்வி, நிரூப், சிபி ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது.
தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
இறுதிப்போட்டி நெருங்கி வருவதால், கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக வருண் மற்றும் அக்ஷரா ஆகிய 2 போட்டியாளர்கள் வெளியேற்றட்டனர்.
தற்போது ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், பாவனி, தாமரைச் செல்வி, நிரூப், சிபி ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் இவர்களுக்கு டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடத்தப்படுகிறது.
இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார். அதனால் இதனை வெல்ல அனைத்து போட்டியாளர்களும் முனைப்பு காட்டுவது வழக்கம்.
ஆனால், இந்த சீசனில் டைட்டிலை வெல்லும் அளவுக்கு தகுதி உடையவராக கருதப்பட்டு வரும் தமரைச் செல்வி, இந்த டாஸ்கில் பேசியது அவரது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
இன்று வெளியான புரோமோவில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் உனக்கு ஜெயிக்க வேண்டுமா? இல்லையா? என பிரியங்கா கேட்க, அதற்கு தாமரை "எனக்கு ஜெயிக்க வேண்டாம்" எனக் கூறுகிறார்.
தாங்கள் இவ்வளவு ஆதரவு கொடுத்தும் ஜெயிக்க விருப்பமில்லை என தாமரை சொல்வது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.