தப்பித்த ஆண்கள்; தொக்கா மாட்டிய பெண்கள் - பிக்பாஸ் 8ல் இந்த வார எலிமினேஷன் யார்?
Bigg Boss 8 Elimination : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ள போட்டியாளர் யார் என்கிற விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Bigg Boss Tamil season 8
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 18 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 9 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் வார இறுதியில் ரவீந்தர் சந்திரசேகரும், இரண்டாவது வார இறுதியில் அர்னவ்வும் எலிமினேட் செய்யப்பட்டனர்.
Pavithra Janani
இதையடுத்து தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்கள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் முத்துக்குமரன், செளந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா, பவித்ரா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் முத்துக்குமரன் மற்றும் செளந்தர்யா ஆகியோர் தான் அதிக ஓட்டுக்களை வாங்கி முன்னிலையில் இருப்பதால் அவர்கள் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சப்பாத்தியில் உப்பு; ஜாக்குலின் உருவ கேலி செய்து சௌந்தர்யா அடித்த கமெண்ட்!
Anshitha
அடுத்ததாக அருண், சத்யா, ஜாக்குலினும் கணிசமான வாக்குகளை வாங்கி இருப்பதால் அவர்களும் வெளியேர வாய்ப்பு இல்லை. எஞ்சியுள்ள மூன்று போட்டியாளர்களான அன்ஷிதா, பவித்ரா, தர்ஷா குப்தா ஆகிய மூன்று பேர் தான் டேஞ்ஜர் ஜோனில் உள்ளனர். இதனால் இவர்கள் மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இந்த வாரம் ஒரு பெண் போட்டியாளர் தான் எலிமினேட் ஆக உள்ளார்.
Darsha Gupta
இதில் ட்விஸ்ட் என்னவென்றால் இந்த வாரம் நடைபெற்ற ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் நன்கு பெர்பார்ம் செய்த போட்டியாளர்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும். அதுவும் இந்த முறை பெண்களில் ஒருவருக்கு தான் கிடைக்கும் என்பதால் பவித்ரா நாமினேஷன் ஃப்ரீ பாஸை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த வாரம் அன்ஷிதா அல்லது தர்ஷா குப்தா தான் வெளியேர அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியும் இருப்பதாக கூறப்படுவதால் ஆட்டம் மேலும் சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்... உப்பு சப்பு இல்லாத பிக்பாஸ்; கொளுத்தி போட வரும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார்; யார்?