இவ்ளோ தூரம் வந்தும் டிராபி அடிக்க முடியலயே: ரயானுடன் நடையை கட்டிய பவித்ரா ஜனனி!
Bigg Boss Tamil Season 8 Grand Finale Rayan and Pavithra Eliminated : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே மூலமாக நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்ற ரயான் உடன் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பவித்ராவும் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8 Grand Finale Rayan and Pavithra Eliminated
Bigg Boss Tamil Season 8 Grand Finale Rayan and Pavithra Eliminated : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது இன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது. இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதிப் போட்டி ஆட்டம் பாட்டத்துடன் தொடங்க இருக்கிறது. வைல்டு கார்ட் போட்டியாளர்கள் என்று மொத்தம் 24 போட்டியாளர்கள் உடன் இந்த சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து வாரந்தோறும் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றப்பட்டு இப்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர். இந்த 5 போட்டியாளர்களில் வைல்டு கார்டு மூலமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரயான் மட்டுமே டிக்கெட் டூ ஃபினாலே மூலமாக நேரடியாக இறுதிப் போட்டிக்கு வந்தார்.
Soundarya, Bigg Boss Tamil Season 8 Voting
இன்று நடைபெறும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ரயான் உடன் இணைந்து மற்றொரு போட்டியாளரும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் நடைபெற்ற கேஷ் பேக் டாஸ்கில் ஜாக்குலின் தோல்வியடைந்து வெளியேறினார். இதன் காரணமாக இப்போது ரயான், முத்துக்குமரன், பவித்ரா, சவுந்தர்யா, விஜே விஷால் என்று மொத்தமாக 5 போட்டியாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் டைட்டில் வின்னராக வரும் அந்த ஒரு போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டிராபியுடன் ரூ.50 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
Bigg Boss Tamil Season 8 Ticket to Finale, Muthukumaran, Pavithra
ஆனால், கேஷ் பேக் டாஸ்கில் ஏற்கனவே போட்டியாளர்களுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே டைட்டில் வின்னருக்கு பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த நிலையில் தான் இன்று நடைபெறும் 105ஆவது நாள் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதிப் போடிட்யில் முதல் கட்டமாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தான் ரயான்.
Bigg Boss Tamil Season 8 Grand Finale
பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு மூலமாக கடைசியாக வந்த போட்டியாளர் ரயான் மட்டுமே. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு வந்தார். ஆனால், டைட்டில் வின்னராக வரும் வாய்ப்பு முத்துக்குமரன் அல்லது சவுந்தர்யா ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் நிலையில் ரயான் 3ஆவது ரன்னர் அப்-ஆக வெளியேற்றப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து 4ஆவது ரன்னர் அப் ஆக பவித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார்.
Bigg Boss Tamil Season 8, Bigg Boss Tamil Season 8 Title Winner
இவர்களது வரிசையில் 3ஆவது இடத்தில் சவுந்தர்யாவும், 2ஆவது இடத்தில் விஷாலும் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக டைட்டில் வின்னராக முத்துக்குமரன் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், ரயான் மற்றும் பவித்ரா இருவரும் கேஷ்பேக் டாஸ்கில் தலா ரூ.2 லட்சம் வென்றுள்ளனர். அதோடு இருவரும் இத்தனை நாட்கள் இருந்ததற்கான சம்பளமும் அவர்களுக்கு கணக்கிட்டு வழங்கப்படும். இதில் ரயானுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரமும், பவித்ராவுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.