MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் ரஞ்சித்துக்கு எம்.ஜி.ஆர் வைத்த உண்மையான பெயர் என்ன தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் ரஞ்சித்துக்கு எம்.ஜி.ஆர் வைத்த உண்மையான பெயர் என்ன தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, போட்டியாளர் ரஞ்சித் தனக்கு எம்.ஜி.ஆர் வைத்த உண்மையான பெயர் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 01 2024, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil season 8 Ranjith

Bigg Boss Tamil season 8 Ranjith

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில்.. போட்டியாளர்களும் தங்களை நிகழ்ச்சியில் நிறுத்திக் கொள்ளவும், மக்கள் மனதில் இடம்பிடிக்கவும், போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.

ஆரம்பத்தில் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லை என பிக்பாஸ் சீசன் 8, ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில், கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் விதவிதமான டாஸ்க்களை கொடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றி உள்ளார். சில டாஸ்குகள் கடினமாக இருந்தாலும், அதனை பெண் போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் விதம் சுவாரஸ்யத்தை உச்சம் என கூறலாம்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Ranjith Original name

Ranjith Original name

குறிப்பாக கடந்த வாரம் ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கு இடையே நடந்த மல்யுத்த போட்டி, சென்சேஷனலாக பேசப்பட்டது. விஜய் சேதுபதி இது விளையாட்டாக இருந்தாலும் ஆண் போட்டியாளர்கள் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும், எப்போதும் அதை மறந்து விடக்கூடாது என ஆண் போட்டியாளர்கள் சிலரை வெளுத்து வாங்கியது பாராட்டுகளை பெற்றது. இதன் மூலம் ஒருவருக்கு வெற்றி மட்டுமே இலக்காக இருக்க கூடாது, அந்த வெற்றியை கூட.. மனித தன்மையோடு பெற வேண்டும் என்பதை புரிய வைத்தார்.

அருண் விஜய் முதல்... ராஷ்மிகா வரை! தீபாவளி கொண்டாட்டத்தின் ஸ்பெஷல் போட்டோஸ்!

34
Senthil Kumar is Ranjith Name

Senthil Kumar is Ranjith Name

இப்படி பல விஷயங்களில் விஜய் சேதுபதி கமல்ஹாசனை விட சிறப்பான பார்வையோடு அணுகுவதாக ரசிகர்கள் கூறி வருவது, விஜய் சேதுபதி மீதான நம்பிக்கையை கூட்டி உள்ளது. இந்நிலையில் கடந்து வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரபல நடிகை தர்ஷா குப்தா வெளியேறிய நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த 15 பேரும், தீபாவளியை முன்னிட்டு பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த  சிவகார்த்திகேயன் சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற நிலையில், நேற்றைய தினம் கவின் உள்ளே சென்றார். அதே போல் தீபாவளி சிறப்பு கொண்டாட்டமாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ட்ரெஸ்ஸிங் முதல் கொண்டு அனைத்துமே ரசிக்க வைத்தது.
 

44
Why Ranjith Changed Name

Why Ranjith Changed Name

பிக்பாஸ் வீட்டுக்குள் வரும்போது அதிகம் கவனம் பெறாத போட்டியாளராக இருந்த ரஞ்சித், அமைதியாக விளையாடினாலும் தன்னுடைய நற்செயல்களால் அடுத்தடுத்து மக்கள் மற்றும் விஜய் சேதுபதி மத்தியில், நல்ல பெயரை பெற்று வருகிறார். எப்படியும் பைனல் வரை இவர் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுனிதா ரஞ்சித்திடம் உங்களுடைய நிஜமான பெயர் ரஞ்சித் தானா? என கேட்க, அதற்கு பொறுமையாக பக்கத்தில் வந்து என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித் இல்லை. என்னுடைய பெயர் செந்தில் குமார். அந்த பெயரை எனக்கு வைத்தவர் MGR. அவர் முதலமைச்சராக இருந்த போது, எங்கள் கிராமத்திற்கு வந்தார். அப்போது என் அம்மா என்னை கையில் கொடுத்து பெயர் வைக்கும் படி சொல்ல, அவர் செந்தில் குமார் என பெயர் வைத்தார். என்னுடைய சர்டிபிகேட்டில் எல்லாம் செந்தில் குமார் என்று தான் இருக்கும். ரஞ்சித் என்பது நான் சினிமாவுக்காக வைத்தது என கூறியுள்ளார். 

அழகில் அம்மா ஜோவை மிஞ்சிய தியா! வேஷ்டி சட்டையில் தேவ்; சூர்யா குடும்பத்தின் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
எம்.ஜி.ஆர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved