ஒரு வருஷம் ஆகியும் சண்டை ஓயல; மாறி மாறி வன்மத்தை கக்கிய மாயா - அர்ச்சனா!
Maya and Archana Fight : பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் எலியும் பூனையுமாக இருந்த மாயாவும் அர்ச்சனாவும் தற்போது சமூக வலைதளத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Maya vs Archana
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனும் சண்டைகள் நிறைந்த சீசனாகவே இருந்தது. இதில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆனார். அர்ச்சனாவுக்கு எதிராக அந்நிகழ்ச்சியில் ஒரு கேங்கே இருந்தது. மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், ஐஷு ஆகியோர் அடங்கிய அந்த கேங்கிற்கு புல்லி கேங் என பெயரும் வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடியும் வரை மாயாவுக்கும் அர்ச்சனாவுக்கு சண்டை ஓய்ந்தபாடில்லை. இதன்பின்னர் இருவரும் சினிமாவில் பிசியானதால் அவர்களது சண்டையும் ஓய்ந்தது.
Archana
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்து ஓராண்டு ஆகும் நிலையில், தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் சோசியல் மீடியாவில் மோதிக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அர்ச்சனா இந்த சீசனில் போட்டியாளராக உள்ள தனது காதலன் அருண் பிரசாத்துக்கு ஆதரவளித்து வருகிறார். ஒரு கட்டத்தில் உள்ளே அருண் பிரசாத் செய்யும் செயல்கள் வெளியே அர்ச்சனாவையும் பாதித்தன. குறிப்பாக முத்துக்குமரனை வேண்டுமென்றே அருண் பிரசாத் சீண்டியதால், முத்துக்குமரனின் ரசிகர்கள் அர்ச்சனா மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் டென்ஷன் ஆன அர்ச்சனா சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக கடந்த டிசம்பர் 3ந் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்... டைட்டில் ஜெயிச்சா கூட இவ்ளோ கிடைக்காது! பிக் பாஸ் ரஞ்சித்தின் சம்பளம் இவ்வளவா?
Arun Prasath Lover Archana
அர்ச்சனாவின் அந்த பதிவை பார்த்த மாயா, நேற்று ரிப்ளை செய்திருந்தார். அதில் டியர் அர்ச்சனா, உங்களுக்கு நடந்தவற்றை கேட்டு வருத்தமடைந்தேன். நீங்கள் புகார் அளித்ததில் மகிழ்ச்சி. முந்தைய சீசனை சேர்ந்த பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் இதைவிட 100 மடங்கு அதிகமான மிரட்டல்களை சிலரின் பிஆர் ஏஜென்சியால் எதிர்கொண்டனர். எங்களது குடும்பத்தினர், குழந்தைகள் கூட வன்முறை மற்றும் கற்பழிப்பு போன்ற அச்சுறுத்தல்களுக்கு ஆளானார்கள். அது இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியும். அவர்கள் எல்லாம் கோழைகள், நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அதைக் கொண்டு வந்ததால் நானும் என் அனுபவத்தை பகிர்ந்தேன். உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் நம்புகிறேன் என பொடிவச்சு பேசி இருந்தார்.
Maya, Poornima
மாயா இந்த பதிவில் சிலரின் பிஆர் என குறிப்பிட்டது தன்னை தான் என உணர்ந்து கொண்ட அர்ச்சனா, மாயாவுக்கு பதிலடி கொடுத்து போட்டுள்ள பதிவில், உங்கள் பதிவை பார்த்தேன். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நடக்கும்போது நான் அனுதாபம் கொண்டேன். ஆனால் உங்களுக்கு நடந்தது மட்டும் தவறு என நீங்கள் நினைப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் பிஆர் ஏஜென்சி என் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை.
Archana Fight with Maya
இந்த நேரத்தில் நீங்கள் ஒரு சந்தர்ப்பவாதியாக இருப்பதை விட, ஒன்றாக நிற்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் அல்லவா? செடி வாடிப்போச்சுனா சொல்லு தண்ணி ஊத்த நான் வரேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு மாயா கொடுத்த ரிப்ளையில், உங்களுக்கு நடக்கும்போது மட்டும் எப்படி தப்பாக தெரியும் என்கிற வரியை நீங்களும் ஒரு முறை படிச்சிருங்க. நீங்கள் என் ட்விட்டை புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன், நான் உங்களுக்கு ஆதரவாக தான் பதிவிட்டிருந்தேன். நான் என் அனுபவத்தையும் அதில் பகிர்ந்திருந்தேன் அவ்வளவுதான் என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒரு வருஷம் ஆகியும் உங்களுக்கும் சண்டை ஓயவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றி ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்! கண்ணீரோடு வெளியே சென்றது யார் தெரியுமா?