பிக்பாஸ் வீட்டில் கைகலப்பு; பிரவீனை தாக்கிய கம்ருதீனுக்கு ரெட் கார்டு? ஷாக்கிங் ட்விஸ்ட்!
Bigg Boss Tamil Kamarudin: பிக்பாஸ் வீட்டில் கம்ருதீன், பிரவீனை தாக்கியதால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா? என்கிற விவாதம் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க... மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று ரிவீல் செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் டாஸ்க் ஆரம்பம்:
பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தும் விதமாக, நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பட்ட நிலையில், இன்று முதல் ஹோட்டல் டாஸ்கில் பங்குபெற, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்த சில போட்டியாளர்களை உள்ளே கொண்டு வர உள்ளனர். இதுகுறித்த புரோமோ வெளியாகி நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.
பிரவீன் - கம்மு சண்டை:
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு கைகலப்பு அரங்கேறி இருக்கிறது. அது வேறு யாருக்கும் அல்ல பிரவீன் மற்றும் கம்ருதீன் இடையே தான். பிரவீன், கம்ருதீனை பார்த்து மரியாதையாக பேசு என கூற... கம்மு தான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து பிரவீன் மீது கோவமாக சீறி கொண்டு வருகிறார்.
ப்ரவீனுக்கு விழுந்த அடி:
இதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் பிரவீனை அடக்குகிறார்கள். இருப்பினும், கம்ருதீன் சீறி பாய்ந்து கொண்டு சென்று பிரவீனை முகத்தில் அடிக்க அனைவருமே அதிர்ச்சி அடைகிறார்கள். கடந்த வாரம் FJ வாட்டர் மிலன் ஸ்டாரிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சண்டைக்கு சென்றதை கண்டித்ததோடு இன்றி, இன்றி இனி அப்படி நடந்து கொண்டால்... உங்களை வெளியே நான் பார்க்க வேண்டி இருக்கும் என எச்சரித்தார்.
சாண்ட்ராவின் அழுகை:
விஜய் சேதுபதியின் வார்த்தைக்கு கூட செவி சாய்க்காமல், கம்ருதீன் இப்படி நடந்து கொண்டதால் கண்ருதீனுக்கு கண்டிப்பாக ரெட் காரோடு கொடுக்கப்போவது உறுதி என ரசிகர்கள் நினைத்தனர். அதே போல் கம்ருதீனை எதிர்த்து பிரஜன் சண்டை போட, இதனால் சான்ட்ரா அழ துவங்கி விட்டார். பின்னர் அவரை ஹவுஸ் மேஸ்ட் சமாதானம் செய்ததோடு, ப்ரஜனும் இனி அப்படி நடந்து கொள்ளமாட்டேன் என கூறினார்.
செம்ம ட்விஸ்ட்:
இதை தொடர்ந்து மூவரும் ஒருவரின் பின் ஒருவராக கன்ஃபேஷன் ரூமுக்கு சென்றனர். அப்போது இது மூன்று பேருமே நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த போட்ட ஃபேக் சண்டை என்பது தெரியவந்தது. அதே நேரம் இது பிக்பாஸ் சொல்லி தான் நடந்ததா? இல்லை மூவரும் சேர்ந்து இப்படி செய்தார்களா? என்பது இனிமேல் தான் தெரியவரும். எது எப்படியோ இதில் கொஞ்சம் சேதாரம் ப்ரவீனுக்கு தான். இது தான் சான்ஸ் என கம்மு இவரை கும்மி விட்டார்.