கல்வியா? கிளாமரா? - வெளிநாட்டில் படிக்க போவதாகக் கூறிவிட்டு அரோரா செய்த வேலை!
Arora Sinclair London Diaries Bold Pics : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை அரோரா சின்க்ளேர் வெளிநாட்டில் படிக்க போவதாக கூறிவிட்டு அவர் செய்த செயல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Arora
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் போட்டியாளராகப் பங்கேற்று, தனது துணிச்சலான ஆட்டத்தால் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் அரோரா சின்கிளேர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தாலும், வெளியே வந்த பிறகு தனது கலைப் பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Arora Sinclair London
சமீபத்தில் அரோரா சின்கிளேர் நடிப்பில் 'ரோஸ் இல்லனா ஜாக்' (Rose Illaa Jack) என்ற சுயாதீன ஆல்பம் பாடல் வெளியானது. அஜ்மல் கான் இசையில் உருவான இந்தப் பாடலில், அரோரா இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கிளாமராக நடித்துள்ளார். குறிப்பாக, இதில் இடம் பெற்றுள்ள படுக்கையறை காட்சிகள் மற்றும் நெருக்கமான முத்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
Actress Arora abroad studies controversy
இந்த ஆல்பம் பாடலைப் பார்த்த ரசிகர்கள் பலர், "இது பாடலா அல்லது பிட்டு படமா?" எனுமளவிற்கு எல்லை மீறிய கிளாமர் இருப்பதாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் துஷாருடன் அரோரா நெருக்கமாகப் பழகியது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த ஆல்பம் பாடலைப் பார்த்துவிட்டு, "இதை துஷார் பார்த்தால் என்ன நினைப்பார்?" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அரோரா வெளிநாடு சென்ற ரகசியம்
பிக் பாஸ் போட்டியில் கிடைத்த பணத்தை வைத்து வெளிநாட்டில் மேல் படிப்பு படிக்கப் போவதாக அரோரா ஏற்கனவே கூறியிருந்தார். "கல்வி கற்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதை நோக்கிச் செல்லப் போகிறேன்" என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த அதிரடி கிளாமரான ஆல்பம் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஏஆர் ரகுமான் தயங்கி தயங்கி பாடிய ஒரு பாடல் – 30 ஆண்டுகளாக மேஜிக் செய்யும் அற்புதம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.