பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்?... குறைவான வாக்குகளால் உறுதியான தகவல்!
எதிர்பாராத திருப்பமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும் சுசித்ரா ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டு 14 போட்டியாளர்கள் மீதமிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் அதில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய 7 பேர் இடம் பிடித்தனர்.
அதன்பின்னர் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக Topple card என்ற ஒன்றை அறிமுகம் செய்தனர். அதன் மூலம் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த அனிதா எஸ்கேப் ஆகி சம்யுக்தாவை கோர்த்துவிட்டுள்ளார்.
இதனிடையே மக்கள் அதிக எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வைத்திருந்த போட்டியாளர்கள் என்றால் அது ஜித்தன் ரமேஷும், நிஷாவும் தான்.
நிஷாவாது அவ்வப்போது சிரிக்கவும், அழவும் வைக்கிறார் ஆனால் ஜித்தன் ரமேஷ் பெரிதாக எதையும் செய்தது போல் இல்லை என பிக்பாஸ் ரசிகர்கள் மிகவும் ஃபீல் செய்கிறார்களாம்.
அதனால் இந்த முறை ஜித்தன் ரமேஷுக்கு தான் மிகவும் குறைந்த அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனால் இந்த முறை நிஷாவை விட ஜித்தன் ரமேஷ் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம் நாளை தெரிந்துவிடும் யார் உள்ளே... வெளியே... என்று என ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.