- Home
- Cinema
- விஜய்காக ..சிறு வயதிலிருந்து பிக்பாஸ் ராஜு சேர்த்த பொக்கிஷம்...அவரை பார்த்து தளபதி என்ன சொன்னார் தெரியுமா?..
விஜய்காக ..சிறு வயதிலிருந்து பிக்பாஸ் ராஜு சேர்த்த பொக்கிஷம்...அவரை பார்த்து தளபதி என்ன சொன்னார் தெரியுமா?..
சமீபத்தில் இன்டர்வியூ ஒன்றில் பேசிய ராஜு, பிக்பாஸ் செல்வதற்கு 15 நாட்கள் முன்பு பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

bigg boss raju
கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜு, பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
bigg boss raju
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.
bigg boss raju
கடைசியாக நடந்து முடிந்த 5-வது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் டிராபியும், ரூ.50 லட்சம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.
bigg boss raju
பிரியங்கா இரண்டாம் இடம் பிடித்தார். டைட்டில் ஜெயித்த ராஜுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
bigg boss raju
இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கனா காணும் காலங்கள், கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி மற்றும் பாரதிகண்ணம்மா ஆகிய சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
bigg boss raju
இவர் நீண்ட வருடமாக காதலித்து தனது காதலியான தரிகாவை எளிய முறையில் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
bigg boss raju
சமீபத்தில் வீடியோ கால் ஒன்றில் பேசிய அவர், பிக்பாஸ் செல்வதற்கு 15 நாட்கள் முன்பு பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கொஞ்ச நேரம் விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்தாராம் ராஜு. அப்போது உங்கள் கண்கள் பயங்கரமா இருக்கு என்று பாராட்டினாராம் விஜய்.
bigg boss raju
பின் சிறு வயதிலிருந்தே விஜய்க்காக சேர்த்து வைத்த ஒரு புத்தகத்தை ராஜு காட்ட, அதைப் பார்த்துவிட்டு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தாராம் விஜய்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.