MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக் பாஸ் வீட்டிற்கு போனாலே இப்படி தான் போல...அப்ப தாடி பாலாஜி..இப்ப இசைவாணி..

பிக் பாஸ் வீட்டிற்கு போனாலே இப்படி தான் போல...அப்ப தாடி பாலாஜி..இப்ப இசைவாணி..

தன்  மீது ஆசிட் அடிப்பேன் என முன்னாள் கணவர் மிரட்டுவதாக பிரபல கானா இசைப்பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான இசைவாணி  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

2 Min read
Kanmani P | Asianet News
Published : Jan 07 2022, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
bigg boss tamil

bigg boss tamil

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

28
bigg boss 5

bigg boss 5

தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

38
Isaivani

Isaivani

 இந்த சீசனில் போட்டியாளராக இருந்த கான பாடகியான இசைவாணி, ஏஇவர் மதுமிதாவை தொடர்ந்து வெளியேறினார். கானா பாடகியாக பலருக்கும் பரிட்சயமான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட்டிதொட்டி எங்கிலும் பிரபலமாகிவிட்டார். 

48
Isaivani

Isaivani

ஆண்கள் மட்டுமே கானா பாடலில் கோலோச்சிக் கொண்டிந்த நிலையில், பெண்களாலும் கானா பாடல் பாட முடியும் என்பதை நிரூபித்த இசைவாணி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரையில் வானம் விடிஞ்சிடுச்சி என்ற பாடலில் இவர் பாடிய கானா பகுதி பலரையும் ஈர்த்தது. இதைத் தொடர்ந்து விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், சில வாரங்கள் கழித்து அந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார்.

58
isaivani

isaivani

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சக கானா பாடகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டர் இசைவாணி. ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளில் அவர் கணவரை  பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இசைவாணி. விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும், தன் மீது ஆசிட் அடிப்பேன் என முன்னாள் கணவர் மிரட்டுவதாகவும்  குற்றம்சாட்டியுள்ளார்.

 

68
thadi balaji

thadi balaji

இதேபோல பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், தன்னுடைய மனைவி நித்யாவை சமாதான படுத்துவதற்காக தாடி பாலாஜியும் கலந்து கொண்டார். ஆனால் முதலில் சமரசம் ஆவது போல், தெரிந்தாலும், பிறகு அதுவும் பிரச்சனையில் தான் முடிந்தது. எனவே இப்போது வரை இருவருமே தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

78
actor balaji

actor balaji

இருவரும் மகளுக்காகவாவது மீண்டும் ஒன்றிணைவார்கள் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த வேலையில், நடிகர் தாடி பாலாஜி மீது அவருடைய மனைவி புகார் தெரிவித்துள்ளார். அதில் தாடி பாலாஜி குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது மகளையும் தாக்குவதாக தெரிவித்திருந்தார். உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் தனது மனைவி நித்யா ஆகியோரால் தனது குழந்தை போஷிகாவிற்கு ஆபத்து உள்ளதாக குற்றச்சாட்டியிருந்தார் தாடி பாலாஜி. 

88
biggboss vanitha

biggboss vanitha

பிக் பாஸ் தமிழ் 3 -ல் போட்டியாளராக இருந்த வனிதா விஜய்குமார். அந்த சீசனில் மொத்த சர்ச்சைக்கும் காரணமாக இருந்தவர். பின்னர் வெளியேறிய பிறகு பீட்டர் பால் என்பவரை 3 வது திருமணம் செய்து கொண்ட வனிதா ஒரு சில நாட்களிலேயே பீட்டர் பாலுடனான   (Peter Paul) திருமணத்தை முறித்துக் கொண்டார்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved