MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கவிஞர் சினேகனுக்கு கல்யாணம்... மனைவியாக வரப்போகும் பிரபல நடிகை யார் தெரியுமா?

கவிஞர் சினேகனுக்கு கல்யாணம்... மனைவியாக வரப்போகும் பிரபல நடிகை யார் தெரியுமா?

சினேகன் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான கன்னிகா ரவியைத் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 25 2021, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
snehan

snehan

நடிகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர் கவிஞர் சினேகன். தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அதில் பல்வேறு பாடல்கள் தமிழக மக்களின் டாப் ப்ளே லிஸ்டில் நீங்காமல் இடம் பிடித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
bigboss

bigboss

அத்தோடு உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சினேகன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். 

37
snehan

snehan

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகன், நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

47
snehan

snehan

snehan

57
snehan

snehan

தற்போது கவிஞர் சினேகனுக்கு ஜூலை 29ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் போட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனக்கு சினேகன் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள திருமாவளவன், “கவிஞர் சினேகன் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என். மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன் இல்லறமேற்கும் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்” என்றும் பதிவிட்டுள்ளார். 

67
snehan

snehan

இதனிடையே சினேகன் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான கன்னிகா ரவியைத் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

77
snehan

snehan

கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானவர் கன்னிகா ரவி,  அதனைத் தொடர்ந்து சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில் பிரபலமான ‘கல்யாண வீடு’ தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?
Recommended image2
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image3
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved