- Home
- Cinema
- பிக்பாஸ் வீட்டில் இருந்து உடல்நல பிரச்சனையால் வெளியேற்றப்பட்ட ஸ்ட்ராங் போட்டியாளர்! யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து உடல்நல பிரச்சனையால் வெளியேற்றப்பட்ட ஸ்ட்ராங் போட்டியாளர்! யார் தெரியுமா?
Bigg Boss Breaking Strong Contestant Eliminated: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து, திடீரென ஸ்ட்ராங் போட்டியாளர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிக்பாஸ் 9 மோசமான சீசனா?
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை, சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பிக்பாஸ் பல விஷயங்களை செய்தாலும் போட்டியாளர்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்காததால் இதுவரை நடந்து முடிந்துள்ள 8 சீசன்களை விட இது மோசமான சீசன் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். கடந்த வாரம் களமிறங்கிய 4 போட்டியாளர்களும், உள்ளே இருப்பவர்களுக்கு வெளியில் உள்ளவர்கள் அவர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கூறியபோதும், உள்ளே இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் சிலர் அதை கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் கத்திக்கொண்டு தான் இருக்கின்றனர்.
ஹோட்டல் டாஸ்க்:
இந்த நிலையில் தான் பிக்பாஸ், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திலும், அவர்களை கண்ட்ரோல் செய்யும் விதமாகவும், ஹோட்டல் டாஸ்க் ஒன்றை துவங்கி கெஸ்ட்டாக ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தீபக், மஞ்சரி, மற்றும் பிரியங்கா ஆகியோரை உள்ளே அனுப்பினார். முதல் நாள் உள்ளே வந்தவர்களை விழுந்து விழுந்து கவனித்த போட்டியாளர்கள் பின்னர் தங்களின் சேட்டையை காட்ட துவங்கினர்.
சாமர்த்தியத்தை காட்டிய சாண்டரா:
மேனேஜர் போஸ்டில் இருந்த திவ்யா குழுவை ஒருங்கிணைத்து செல்லவில்லை என கூறி அவரை வேலையில் இருந்து மாற்றும்படி கூறினார்கள். இவரை தொடர்ந்து மேனேஜர் போஸ்டிங்கிற்கு வந்த விக்கல்ஸ் விக்ரம் ஐயோ தனக்கு இந்த வேலை வேண்டாம் என, கண்ணீர் விட்டு கதறிக்கொண்டு பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் போட்டியாளர்கள் ஓட்டிங் செய்து சபரியை மேனேஜராக மாற்றினார்கள். சாண்ட்ராவும் தந்திரமாக செயல்பட்டு தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்கில் வெற்றிபெற்றார்.
மன்னிப்பு கேட்ட பிக்பாஸ்:
எனவே அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரீ பாஸ் சாண்ட்ராவுக்கு கிடைக்க உள்ளது. மேலும் போட்டியாளர்கள் செய்த அளப்பறைக்காகவும், கெஸ்ட்டாக வந்தவர்களின் மனம் நோகும் படி நடந்து கொண்டதாகவும், பிக்பாஸ்சே மன்னிப்பு கேட்ட சம்பவங்களும் நடந்தன.
கெமி வெளியேற்றம்:
பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவும் குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் தான், தற்போது மிகவும் ஸ்ட்ராங் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, எந்த ஒரு டாஸ்க் என்றாலும் அதில் தன்னுடைய முழு ஏஃபோட் போட்டு விளையாட கூடிய போட்டியாளர் தான் கெமி. இவருக்கு அங்கிருக்கும் ஈரப்பதம் காரணமாக உடலில் தோல் உரிந்து வந்துள்ளது. இதற்கங்க பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தற்காலிகமான வெளியேற்றமா? அல்லது நிரந்தர வெளியேற்றமா என்பது இன்றைய தினம் தான் தெரியவரும்.