பிக்பாஸ் அனிதா கர்ப்பமா?..டபுள் மீனிங் கமெண்டுக்கு ஸ்மார்ட் பதில் கொடுத்த பிரபலம்..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செய்தி வாசிப்பாளர் அனிதா..டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு மிக கூலாக அளித்துள்ள பதில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

anitha sambath
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா வெள்ளித்திரை வரை இன்று பிரபலமாகவுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா.
Anitha sampath
அதோடு ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். பின்னர் காப்பான், தர்பார் உள்ளிட்ட படங்களிலும் தோன்றியுள்ளார் அனிதா.
Anitha sampath
யூடியூப் சேனல் மூலம் அழகு குறிப்புகளை ஷேர் செய்து வந்த அனிதாவிற்கு சோசியல் மீடியாவில் பாலோவர்ஸ் அதிகம்.
anitha sambath
பிக்பாஸ் 4 வது சீசனில் பங்கேற்ற அனிதா. பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார். பிறகு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
Anitha sampath
பின்னர் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட்டிலும் பங்கேற்றார் அனிதா. ஆனால் இந்த முறையும் பாதியில் வெளியேறிவிட்டார்.
Anitha sambath
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல விளம்பரங்களில் கமிட்டாகி வரும் அனிதாஅவ்வப்போது கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
anitha sambath
அந்த வகையில் தற்போது இன்ஸ்டா கேம் விளையாடிய அனிதா அந்த புகைப்படங்களை ரிலீஸில் வைத்துள்ளார். அதில் ‘எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
anitha sambath
பின்னர் பதிலளித்த அனிதா இது வெறும் ரீல்ஸ் தான் உண்மையில் கர்ப்பமெல்லாம் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கமெண்ட் பதிவிட்டுள்ள ஒருவர் ‘இந்த வீடியோ போடற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பாதிருக்கலாம். கர்ப்பமாகி இருப்பாங்க என்று கமெண்ட் செய்து இருந்தார். டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்துள்ள இவருக்கு பதிலாக ஸ்மைலியை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் அனிதா.