நேத்து அப்படி... இன்னைக்கு இப்படியா?... பட்டுப்புடவையில் குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் யாஷிகா ஆனந்த்...!
குனிந்த தலை நிமிராமல் போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் போட்டோக்களை பார்த்து நேத்து அப்படி... இன்று இப்படியா?... இந்த அடக்க ஒடுக்கம் கூட எங்களுக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு என ரசிகர்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.
“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற அடல்ட் படத்தில் அளவுக்கு அதிகமாக கவர்ச்சியை வாரி இறைத்தாலும் யாஷிகா ஆனந்திற்கு அதிர்ஷ்ட காற்று அடித்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
கடலில் வலை வீசி மீன் பிடிப்பது போல் கவர்ச்சி வலை வீசி வாய்ப்பு தேடி வரும் யாஷிகாவிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் மட்டுமே உள்ளன.
வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை வரை இறங்கி வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மாடலிங்கில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிட்டு இளைஞர்கள் பட்டாளத்தை ஏங்க வைக்கிறார்.
நேற்று உச்சத்திலும் உச்சமாக உற்று பார்த்தாலே தெரிவது போல் மெல்லிய ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் தாறுமாறு கவர்ச்சி காட்டி மிரளவைத்தார்.
ஆனால் இன்றோ அடக்க ஒடுக்கமான குடும்ப குத்துவிளக்காக யாஷிகா ஆனந்த் நடத்தி முடித்துள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தலை நிறைய மல்லிகைப்பூ, முகம் மலர சிரிப்பு என பார்க்க, பார்க்க கண்ணு படும் அளவிற்கு அழகாக இருக்கிறார் யாஷிகா.
கழுத்து நிறைய பொன் நகைகள் அணிந்து அழகிய பட்டுப்புடவையில் அம்சமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
குனிந்த தலை நிமிராமல் போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் போட்டோக்களை பார்த்து நேத்து அப்படி... இன்று இப்படியா?... இந்த அடக்க ஒடுக்கம் கூட எங்களுக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு என ரசிகர்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.