திண்டிவனம் பொண்ணு பிக்பாஸ் வியானாவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
Bigg Boss 9 contestant Viyana Real name Reveledபிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வியானாவின் உண்மையான பெயர் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 9:
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தினந்தோறும் விவாதங்கள், குழப்பங்கள், மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என பரபரப்பு கொஞ்சம் கூட குறையாமல் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 50 நாட்களை எட்ட உள்ள நிலையில், இப்போதுதான் போட்டி சூடு பிடித்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். வீட்டுக்குள் இருக்கும் சில பழைய போட்டியாளர்களும், வைல்டு கார்டாக நுழைந்த புதுப் போட்டியாளர்களும் ஒவ்வொரு நாளும் காரசாரமாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
நடிப்பு அரக்கனின் வெளியேற்றம்:
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கனி வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நடிப்பு அரக்கனான தர்பூசணி ஸ்டாரை பிக்பாஸ் வெளியேற்றியது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலை என்றாலும், மற்றொரு தரப்பினர் வரவேற்றனர்.
இந்த வாரம் யார் வெளியேறுவார்?
இந்த வாரம், பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் செய்ய சொன்ன நிலையில்... இதன் காரணமாகவே சில பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் உள்ளே நடந்துள்ளது. மேலும் இந்த வாரம், FJ தலைவர் என்பதால் அவர் எப்படி போட்டியாளர்களை வழிநடத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ளவும் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த வாரம், நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ள அமித், பார்வதி, ப்ரஜின், சாண்ரா, ரம்யா உள்ளிட்ட போட்டியாளர்களின்... ரம்யா வெளியேறவே அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
வியானா:
அதே போல் ஆரம்பத்தில் இருந்து மிகவும் அமைதியாக வியானா விளையாடி வந்தாலும், கடந்த சில வாரங்களாக புதிய உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். பேச வேண்டிய இடங்களில் சரியாக பேசுவது இவரின் மிகப்பெரிய பிளஸ்சாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் வியானா பற்றிய ஒரு முக்கிய தகவல் தற்போது, வெளியாகி உள்ளது.
வியானாவின் உண்மையான பெயர்:
அதாவது, வியானா தன்னை பற்றி பேசும் போது... தன்னுடைய சொந்த ஊர் திண்டிவனம் என்றும், தமிழகத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய தாய் மொழி உருது என்பதால், நான் தமிழ் பேசுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது என பலர் கூறி உள்ளனர் என்கிறார். அதே போல் தன்னுடைய உண்மையான பெயர் வியானா இல்லை என்றும், மாடலிங் துறையில் நான் உண்மையான பெயரை பயன்படுத்த என் குடும்பத்தினர் அனுமதி கொடுக்கவில்லை என கூறி இருந்தனர்.
எனவே வியானாவின் உண்மையான பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பலரும், கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது இவரின் உண்மையான பெயர் தெரியவந்துள்ளது. அதாவது வியானாவின் உண்மையான பெயர் ரஷீதா பானு என தெரியவந்துள்ளது. வியானாவின் இந்த பெயர் எப்படி உள்ளது என்பதை நீங்களும் கமெண்ட் மூலம் சொல்லுங்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.