MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கண்கலங்க வைக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை – ‘தாய் கிழவி’க்கு சொன்ன வாழ்த்து!

கண்கலங்க வைக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை – ‘தாய் கிழவி’க்கு சொன்ன வாழ்த்து!

Bharathiraja and Radikaa Sarathkumar video: ராதிகா நடித்த சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘தாய் கிழவி’ படத்திற்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 19 2026, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தாய் கிழவி:
Image Credit : X

தாய் கிழவி:

தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்படும் படங்களை அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட திரைப்படமாக மாறியுள்ளது ‘தாய் கிழவி’. இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இந்த படம், நகைச்சுவை கலந்த சமூக கருத்தை வலியுறுத்துகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
 கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா:
Image Credit : stockPhoto

கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா:

இதுவரை எந்த படத்திலும் நடித்திராத வகையில், ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், அவரது மேக்-ஓவரும் மிகவும் இயல்பானதாக அமைந்துள்ளது. 70 வயதான தைரியமான கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். மேலும் முத்துக்குமார், முனிஷ்காந்த், ரேச்சல் ரெபேக்கா, இளவரசு, ஜார்ஜ் மரியன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

35
நிவாஸ் கே. பிரசன்னா இசை:
Image Credit : instagram / Radhika Sarathkumar

நிவாஸ் கே. பிரசன்னா இசை:

10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், திரையரங்குகளில் சுமார் 80 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு கிராமத்து மணம் கமழும் இசையால் வலு சேர்த்துள்ளார் நிவாஸ் கே. பிரசன்னா. திரையரங்குகளில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ, அதே அளவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

45
ராதிகாவின் குருநாதரான பாரதிராஜா:
Image Credit : x/offBharathiraja

ராதிகாவின் குருநாதரான பாரதிராஜா:

இந்நிலையில், ராதிகாவின் குருநாதரான பாரதிராஜா இந்த படத்தை பார்த்து, நடிகை ராதிகாவை வாழ்த்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக இருந்துவரும் பாரதிராஜா, தன் மகன் மறைவுக்குப் பின்னர் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது இவரது உடல்நிலை குறித்து வதந்திகளும் வெளியாகி வருகின்றன.

https://t.co/cE6ryYgyDo

— Radikaa Sarathkumar (@realradikaa) April 18, 2026

55
தேசிய விருது?
Image Credit : twitter

தேசிய விருது?

இந்நிலையில், பாரதிராஜா மிகவும் மெலிந்த நிலையில் காணப்படுகிறார். ‘தாய் கிழவி’ படத்தை பார்த்தீர்களா என ராதிகா கேட்க, அவர் பார்த்ததாக கூறி, “இந்த படத்திற்காக உனக்கு தேசிய விருது கிடைக்கும்” என்று வாழ்த்தியுள்ளார். குரு–சிஷ்யை இடையேயான அழகிய உணர்வுப்பூர்வமான உறவை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், எப்போதும் கம்பீரமாக காணப்படும் பாரதிராஜாவின் இந்த நிலை ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாரதியார்
ராதிகா சரத்குமார்
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image2
Actress : பர்ஸ்ட் படத்துல 1 லட்சம் சம்பளம்... இன்று 10 ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி - யார் இந்த கோலிவுட் நாயகி?
Recommended image3
Siragadikka Aasai : 1000 எபிசோடுகளை எட்டி சிறகடிக்க ஆசை சாதனை... இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டிய விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved