MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாரதி ராஜாவுக்காக மனோஜ் செய்த தியாகம்; 24 வருஷம் கழித்து அவராலேயே நிறைவேறிய கனவு!

பாரதி ராஜாவுக்காக மனோஜ் செய்த தியாகம்; 24 வருஷம் கழித்து அவராலேயே நிறைவேறிய கனவு!

இயக்குனராக  வேண்டும் என்கிற கனவில் இருந்த மனோஜ் பாரதி ராஜா, தந்தையின் ஆசைக்காக நடிகராக மாறிய நிலையில், பின்னர் அவரை வைத்தே படம் இயக்கி கனவை நிறைவேற்றினர் என்பது தெரியுமா? 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 26 2025, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மணிரத்னம் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'பம்பாய்' படத்தில், துணை இயக்குனராக பணியாற்றியவர் தான் மனோஜ் பாரதிராஜா. இதை தொடர்ந்து தனக்கான கதையை தயார் செய்த மனோஜ், அப்பா பாரதிராஜாவிடம் சென்று படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்த, படம் இயக்குவது மிகவும் கடினம். நான் ஒரு நடிகனாக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதால் திரைப்படம் இயக்க ஆரம்பித்தேன்.
 

24
அப்பாவுக்காக நடித்த மனோஜ்

அப்பாவுக்காக நடித்த மனோஜ்

என்னுடைய நிழலையாவது திரையில் பார்க்க ஆசை படுகிறேன் என கூறி, மனோஜ் ஹீரோவாக நடிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும், அப்பாவுக்காக சம்மதம் தெரிவித்த மனோஜ், திரையுலகில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்தார். மனோஜ் ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

Manoj Bharathiraja: எனக்கு அல்லு விட்டுடுச்சு; இளையராஜா பற்றி மனோஜ் பாரதிராஜா பகிர்ந்த தகவல்!
 

34
சுசீந்திரன் தயாரிப்பில் வெளியான படம்

சுசீந்திரன் தயாரிப்பில் வெளியான படம்

திரையுலகில் இருந்து சில காலம் விலகியே இருந்த மனோஜ், கடந்த 2023-ஆம், தன்னுடைய கனவை நிறைவேற்றும் விதமாக இயக்கிய திரைப்படம் தான் 'மார்கழி திங்கள்'.  இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்க, இந்த படத்தையே தாங்கி பிடிக்கும் முக்கிய ரோலில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடித்திருந்தார்.
 

44
மார்கழி திங்கள் மூலம் நிறைவேறிய மனோஜ் ஆசை

மார்கழி திங்கள் மூலம் நிறைவேறிய மனோஜ் ஆசை

1999-ஆம் ஆண்டு அப்பாவுக்காக தன்னுடைய ஆசையை தியாகம் செய்து விட்டு, ஹீரோவாக நடிக்க துவங்கிய மனோஜின் ஆசை 24 வருடங்கள் கழித்து, இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. அதே போல் பாரதி ராஜாவிற்கு பிறகு அவரின் வாரிசுக்கு சுமார் 31-வருடங்கள் கழித்து இளையராஜா இசையமைத்திருந்தார். அதன்படி பாரதி ராஜா மற்றும் இளயராஜா ராஜா காம்போவில் மார்கழி திங்கள் படத்திற்கு முன் கடைசியாக வெளியான படம், 'நாடோடி தென்றல்' என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்து காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், அங்குள்ள சமூக பிரச்சனையையும் பேசி இருந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும், வசூல் ரீதியாக இப்படம் தோல்வியை சந்தித்தது குறிபிடத்தக்கது.

நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் கடைசி ஆசை; 13 வருஷம் காத்திருந்தும் நடக்கல!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாரதியார்
மனோஜ் பாரதிராஜா காலமானார்
மனோஜ் பாரதிராஜா திரைப்படங்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவர் தந்த மலடி பட்டம்... விவாகரத்துக்கு பின் பிறந்த குழந்தை - நடிகை ரேவதியின் கண்ணீர் கதை
Recommended image2
மீம் கிரியேட்டர்களின் கடவுள்.. வடிவேலுவுக்கு ஆடி கார் முதல் BMW கார் வரை.. இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
Recommended image3
விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved