BiggBoss Ultimate : பிக்பாஸ் வீட்டின் சுவற்றை ஏத்திக் கட்ட சொல்லும் கமல்!! அடடே அப்போ அவரும் வர்றாரு போல
ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ள இந்நிகழ்ச்சியின் புரோமோ வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர்.
ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்நிகழ்ச்சி தற்போது புதிய பரிணாமத்தில் மக்களை மகிழ்விக்க வருகிறது. அதன்படி ஓடிடி தளத்துக்காக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. பிரத்யேகமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ள இந்நிகழ்ச்சியின் புரோமோ நேற்று வெளியானது. இதில் முந்தைய சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறக்க உள்ளனர். அதில் சிலரை புரோமோவிலேயே சூசகமாக கூறிவிட்டார் கமல்.
அதன்படி புரோமோவில், பிக்பாஸ் வீட்டின் சுற்றுச்சுவறை கட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன. அப்போது அங்கு வேலை செய்பவர்களிடம் சுவற்றை நல்லா ஏத்திக் கட்டுங்க அப்டினு சொல்கிறார் கமல், இதன்மூலம் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சுவற்றில் ஏறி வெளியேற முயன்ற பரணி, இந்த அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொள்வார் என யூகிக்க முடிகிறது.
அதேபோல் கிச்சனில் அமர்ந்தபடி கொளுத்திப் போடுவது பற்றி பேசுகிறார் கமல். அந்த சமயத்தில் வனிதாவின் குரலும் பின்னணியில் ஒலிக்கிறது. இதன்மூலம் வனிதா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இன்னும் யாரெல்லாம் வரப்போறாங்கனு பொருத்திருந்து பார்ப்போம்.