'நாங்கள் அவரை விட சிறந்த பாடகர்கள்'' கேகே -வை விமர்சித்த பாடகரை வெளுத்து வாங்கிய நடிகை
கேகே மறைவுக்கு முன்னர் பெங்காலி பாடகர் ஒருவர் பங்கர் பாக்ச்சி, “யார் கேகே? என கேட்டதால் சர்ச்சையில் சிக்கி கொண்டார்.

KK/Instagram
கே.கே என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மே 31 செவ்வாய் அன்று காலமானார். அவரது மறைவு நெட்டிசன்களை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 53 வயதான இவர் நிகழ்ச்சியின் இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் முன் தங்கியிருந்த ஓட்டலிலேயே உயிரிழந்தார்.
RIP KK
பிரதமர் உட்பட பிரபலங்கள் பலரும் கேகேவின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது, பெங்காலி பாடகர் ஒருவர், அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பிரபல பின்னணிப் பாடகர் குறித்து தெரிவித்த கருத்துக்களால் பேசும் பொருளாக மாறியுள்ளார். ரூபங்கர் பாக்ச்சி, “யார் கேகே? நாங்கள் அவரை விட சிறந்த பாடகர்கள் என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
RIP KK
ஃபேஸ்புக் லைவ் லைவின் போது ரூபங்கர் பாக்ச்சி; KK பற்றி தனது கருத்துக்களை முன்வைத்தார்.'கேகேவின் பாடல்களைக் கேட்ட பிறகு, நாம் அனைவரும் KK ஐ விட நன்றாகப் பாடுகிறோம் என்பதை உணர்ந்தேன். அது என்ன ஹைப்? இது KK, KK, KK யார் கே? நாம் எந்த K ஐ விடவும் சிறந்தவர்கள்," என்று ரூபாங்கர் கூறினார்.
RIP KK
இந்நிலையில் பெங்காலி நடிகை ரூபஞ்சனா மித்ரா, மறைந்த பாடகர் பற்றிய "உணர்ச்சியற்ற" கருத்துக்காக பாக்சியை சாடியுள்ளார். “அவமானம் மிஸ்டர் ரூபாங்கர் பாக்சி!!! நீங்கள் ஒரு சுயநல ஆன்மாவைத் தவிர வேறொன்றுமில்லை, ”என்று அவர் பேஸ்புக் பதிவில் எழுதினார். "முதலில் உங்கள் குறுகிய மனப்பான்மையை சரிசெய்து கொள்ளுங்கள், பின்னர் உங்களை KK உடன் ஒப்பிடுங்கள். அவரைப் போன்ற பாடகரை இழிவுபடுத்த உங்களுக்கு உரிமை இல்லை. ஆம், நான் ஒரு KK ரசிகை மற்றும் நீங்கள் உங்கள் பொறாமையை வெளிப்படுத்திய விதம் மிகவும் வேதனைக்குரியது.,” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.