விடாமுயற்சியை விடுங்க... சத்தமில்லாம தயாராகும் அஜித்தின் இன்னொரு படம் - அடிக்கடி ஃபாரின் விசிட் இதற்குத்தானா?
விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கப்படாமல் இழுத்தடித்து வருவதால், நடிகர் அஜித் சைலண்டாக இன்னொரு பட வேலைகளை கவனித்து வருகிறாராம்.
Ajith
நடிகர் அஜித்தின் 62-வது படம் விடாமுயற்சி. இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வந்தாலும், இன்னும் ஷூட்டிங் தொடங்கியபாடில்லை. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை தூக்கிவிட்டு, மகிழ் திருமேனியை இப்படத்தின் இயக்குனராக கமிட் செய்தனர். அவர் கமிட் ஆகி கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிடவில்லை.
Ajith
நடிகர் அஜித்தும் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருகிறார். அவர் விடாமுயற்சி படத்துக்காக உடல் எடையை குறைக்க தான் வெளிநாடு சென்று வருவதாக கூறப்பட்டாலும், அவர் சைடு கேப்பில் இன்னொரு முக்கிய வேலையையும் பார்த்து வருகிறாராம். நடிகர் அஜித் உலக பைக் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் முதல் கட்டம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட பயணத்தை வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளார் அஜித்.
இதையும் படியுங்கள்... 2 நாள் சாப்பிட கூட காசு இல்லாமல் பட வாய்ப்பு தேடிய... சூரியின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Ajith
நடிகர் அஜித் தன்னுடைய உலக பைக் சுற்றுலா முழுவதையும் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதனை அவர் ஆவணப்படமாக எடுக்க இருப்பதாகவும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதற்கான உரிமையை வாங்கி இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இருப்பினும் பின்னர் அதுகுறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது கிடைத்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, நடிகர் அஜித் அந்த ஆவணப்படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறாராம்.
Ajith
இந்த ஆவணப்பட பணிகள் தொடர்பாக தான் அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு அவர் தொடங்கி இருக்கும் ஏகே மோட்டோ ரைடு என்கிற பைக் சுற்றுலா கம்பெனியின் விளம்பரத்திற்காகவும் தனது பைக் பயண வீடியோவை அஜித் பயன்படுத்த பிளான் போட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் அஜித்தின் ஆவணப்படமோ அல்லது விளம்பரமோ வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... வெகேஷனில் கூட சமந்தாவின் வேற லெவல் ஒர்கவுட்! ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த வீடியோ..!