SK 21- கதை இது தானாம்? உண்மையை போட்டுடைத்த பீஸ்ட் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'டான்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க உள்ள எஸ்கே 21 படத்தின் கதையை பீஸ்ட் ஸ்டண்ட் ஜோடி அன்பறிவு ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

sivakarthikeyan
பிரபல தொலைக்காட்சி ஒன்று மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக தனது பயணத்தை துவங்கிய தன் பயணத்தை தன்னிகரில்லா நாயகனாக நிலைநிறுத்தி கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
sivakarthikeyan
சிவகார்த்திகேயன் தற்போது நடிகர், பாடலாசிரியர், தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பான் முகம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது.
sivakarthikeyan
நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது டான் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படம் மே மாத முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது.
Sivakarthikeyan
இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை ‘ஜாதி ரத்னலு’ இயக்கிய டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.
Sivakarthikeyan
SK 20 என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரபோஷப்கா என்கிற நடிகை நடிக்க உள்ளார்.
Sivakarthikeyan
இந்நிலையில் 21 வது படத்திலும் கமிட் ஆகிவிட்டார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள புதிய படம் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பிற்கு வரும் என சொல்லப்படுகிறது.
Sivakarthikeyan
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் பீஸ்ட், 'கேஜிஎஃப் 2' ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் ஜோடி பணியாற்றவுள்ளார்.
Sivakarthikeyan
சமீபத்தில் இந்த ஸ்ஜோடி அளித்துள்ள பேட்டியில்; 'எஸ்கே 21 ' பெரிய பட்ஜெட் பான் இந்திய படம் என்றும், தேசபக்தி அதிகமாக இருக்கும் என்றும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் நடிவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.