உள்ளூரில் சொதப்பினாலும் உலகளவில் கெத்து காட்டிய பீஸ்ட்...வசூல் எவ்வளவு தெரியுமா?
உலகம் முழுவதும் வெறும் 5 நாட்களில் பீஸ்ட் செய்துள்ள வசூல் சாதனை குறித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

beast
விஜய்யின் 65வது படமான பீஸ்ட் ரசிகர்களின் பேராதரவுடன் பிரமாண்டமாக கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
beast
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அதோடு விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரம் நடித்துள்ளனர்.
beast
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான இந்த படத்தின் மூன்று பாடல்களும் நல்ல வெற்றியை பெற்று தந்தது.
beast
பின்னர் வெளியான ட்ரைலர் ரசிகர்களை ஈர்த்ததோடு பீஸ்ட் குறித்து எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. இதையடுத்து வெளியான பீஸ்ட் ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
beast
இந்த படத்தின் மூலம் முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள பூஜா ஹெக்டேவின் நடிப்பு அதிகளவில் ரசிகர்களை கவர்ந்திழுத்து உள்ளது.
beast
முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருந்தாலும் கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகை, விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் கடும் சரிவை சந்தித்தது.
beast
இந்நிலையில் உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.