- Home
- Cinema
- கேஜிஎப் நடிகருடன் ரொமான்ஸ் செய்ய தயாராகும் பீஸ்ட் நடிகை... ஜாக்பாட் வாய்ப்பை தட்டித்தூக்கிய பூஜா ஹெக்டே
கேஜிஎப் நடிகருடன் ரொமான்ஸ் செய்ய தயாராகும் பீஸ்ட் நடிகை... ஜாக்பாட் வாய்ப்பை தட்டித்தூக்கிய பூஜா ஹெக்டே
Pooja Hegde : சமீபத்தில் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளிவந்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவினாலும், இவரின் மவுசு குறைந்தபாடில்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், இவரின் மவுசு குறைந்தபாடில்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன என்கிற பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பூஜா ஹெக்டே. இப்படத்தில் அவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்திற்காக அவருக்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் பூஜா ஹெக்டே. அதன்படி இவர் அடுத்ததாக கேஜிஎப் நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் முதன்முறையாக நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பூஜா ஹெக்டே.
தற்காலிகமாக யாஷ் 19 என அழைக்கப்படும் இப்படத்தை நாரதன் என்பவர் இயக்க உள்ளார். இவர் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன முப்தி படத்தை இயக்கியவர் ஆவார். இந்த முப்தி படம் தான் தற்போது சிம்பு நடிப்பில் பத்துதல என்கிற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதனை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... 14 வயசு பசங்க எனக்கு பாலியல் மிரட்டல் விடுக்குறாங்க... நடிகை சிம்ரன் பரபரப்பு புகார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.