MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT Releases : பத்தா முதல் அக்கா வரை... இந்த வாரம் ஓடிடியில் புது வரவுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

OTT Releases : பத்தா முதல் அக்கா வரை... இந்த வாரம் ஓடிடியில் புது வரவுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

This Week OTT Releases : அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஓடிடியில் ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 27 2026, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
This Week OTT Releases
Image Credit : X

This Week OTT Releases

ஓடிடியில் வார வாரம் புதுப் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன. அதனால் மக்களுக்கும் பொழுதைக் கழிக்க சிறந்த தளமாக ஓடிடி மாறி உள்ளது. முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆன பின்னர் பைரசி என்பது பெரும் தலைவலியாக இருந்தது. ஆனால் ஓடிடி வந்த பிறகு பைரசி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களும் ஓடிடி ரைட்ஸ் விற்கப்படுவதன் மூலம் பெரிய அளவில் லாபம் பார்க்கிறார்கள். அந்த வகையில் அக்டோபர் கடைசி வாரத்தில் ஓடிடியில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பத்தா
Image Credit : Youtube

பத்தா

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் பத்தா. அட்லீ தயாரித்த இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் லிஜோ மோல் ஜோஸ் நடித்திருந்தார். இப்படம் இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. அக்டோபர் 29-ந் தேதி பத்தா படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தார்.

36
சிக்மா
Image Credit : Asianet News

சிக்மா

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான படம் சிக்மா. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் சந்தீப் கிஷான் நாயகனாக நடித்திருந்தார். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வருகிற அக்டோபர் 30ந் தேதி சிக்மா படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் தியேட்டரில் பெரியளவில் கொண்டாடப்படவில்லை என்பதால் ஓடிடியில் இதற்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

46
இம்மார்டெல்
Image Credit : X

இம்மார்டெல்

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த படம் இம்மார்டெல். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லர் படமான இது விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் 30ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

56
அக்கா
Image Credit : instagram And Chatgpt Ai

அக்கா

தங்கக் கடத்தல் மற்றும் அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘அக்கா’ குழுவை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தேவை மையமாக வைத்து உருவாகி உள்ள வெப் சீரிஸ் இது. இந்த வெப் சீரிஸ் வருகிற அக்டோபர் 30ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

66
லவ் ஆல்வேஸ்
Image Credit : X

லவ் ஆல்வேஸ்

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்றொரு வெப் சீரிஸ் தான் லவ் ஆல்வேஸ். இந்த வெப் சீரிஸ் வருகிற அக்டோபர் 30ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப் சீரிஸை மதுமிதா இயக்கி உள்ளார். இதில் கெளரி கிஷான், பிக் பாஸ் மாயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
வைரலாகும் அனிருத் – காவ்யா மாறன் வெடிங் கார்டு: என்ன ஸ்பெஷல்? டிசைனர் பகிர்ந்த சுவாரசிய தகவல்!
Recommended image2
Bigg Boss : மைனிங் மாஃபியாஸ் டீமின் கொட்டத்தை அடக்க டிடிஎஃப் வாசன் போட்ட பக்கா ஸ்கெட்ச்... தரமான சம்பவம் வெயிட்டிங்..!
Recommended image3
Ramayana Songs: ராமாயணம் படப் பாடல்களால் வெடித்த சர்ச்சை... ஏ.ஆர். ரகுமான் கொடுத்த கூல் ரிப்ளை!
Related Stories
Recommended image1
OTT : டஜன் கணக்கான ட்விஸ்டுகளுடன் கூடிய டாப் 5 க்ரைம் த்ரில்லர் படங்கள்... ஓடிடியில் மிஸ் பண்ணாம பாருங்க..!
Recommended image2
OTT Thriller : கண்ணாமூச்சி விளையாடிய தாய்... அடுத்த நொடியே மாயமான மகள்! ஓடிடியில் திகில் கிளப்பும் வெப் சீரிஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved