மகேந்திர பாகுபலியாக நடித்தது இந்த குழந்தையா..? எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க... வைரலாகும் புகைப்படம்..!
ஒட்டு மொத்த உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, பெருமைக்குரிய திரைப்படம் 'பாகுபலி' இந்த படத்தில் 'மகேந்திர பாகுபலியாக' நடித்த குட்டி குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மட்டுமில்லாது, வெளிநாடுகளிலும் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை செய்த இந்த படத்தை, இயக்குனர் ராஜமவுலி இயக்கி இருந்தார்.
இரண்டு பாகங்களாக வெளியான இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர் - நடிகைகளுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.
குறிப்பாக, பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் ஏற்று நடித்த வேடங்களுக்கு வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்த படத்தின் கதையை எழுதிய கதையாசிரியரும், ராஜ மௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையை எழுதிய போதே, யார் யார் இந்த கதாப்பாத்திரங்களுக்கு செட் ஆவார்கள் என தீர்மானித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில், 'மகேந்திர பாகுபலி' யாக நடித்த பிரபாஸ் சிறிய குழந்தையாக ஒரு சில காட்சிகளில் காட்டப்படுவார். இவரை காப்பாற்ற தான், ராஜ மாத சிவகாமி தேவி தன்னுடைய உயிரை கொடுத்து அவரை காப்பாற்றுவார்.
இந்த குட்டி குழந்தை தன்வியின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
தற்போது 7 வயது ஆகும் தன்வி பார்க்கவே செம்ம கியூட்டாக உள்ளார்.
'பாகுபலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கூட தன்வியின் புகைப்படம் தான் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.