- Home
- Cinema
- சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் ஆன பாகுபலி தி எபிக் திரைப்படம்... எந்த ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது தெரியுமா?
சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் ஆன பாகுபலி தி எபிக் திரைப்படம்... எந்த ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது தெரியுமா?
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான பாகுபலி தி எபிக் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Baahubali The Epic OTT release
இந்திய சினிமாவை வியக்க வைத்த பாகுபலி பிரான்சைஸ் மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட்டது. முதல் பாகமான பாகுபலி வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த மறுவெளியீடு செய்யப்பட்டது. 'பாகுபலி தி எபிக்' என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
பாகுபலி தி எபிக் ரிலீஸ்
2015ல் 'பாகுபலி - தி பிகினிங்' என்ற முதல் பாகமும், 2017ல் 'பாகுபலி 2 - தி கன்க்ளூஷன்' என்ற இரண்டாம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்தன. 4K தரத்தில் இந்த படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு அசாதாரண காட்சி அனுபவமாக 'பாகுபலி தி எபிக்' ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது.
மறு வெளியீட்டிலும் ஹிட்
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் படம் திரையிடப்பட்டது. பாகுபலியின் கதையை எஸ்.எஸ். ராஜமௌலியின் தந்தை வி. விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் அதுவரையிலான பிரம்மாண்ட படங்களுக்கான அளவுகோல்களை பாகுபலி மாற்றியமைத்தது. இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றும் ஹிட்டாக உள்ளன.
பாகுபலி தி எபிக் OTT ரிலீஸ்
பாகுபலி தி எபிக் ரீ-ரிலீசிலும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. ரீ-ரிலீஸ் படங்களில் அதிக வசூலை வாரிக்குவித்த தென்னிந்திய படம் என்கிற சாதனையை இப்படம் படைத்தது. இந்த நிலையில் பாகுபலி தி எபிக் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

