ஷங்கரை அச்சு பிசறாமல் காப்பி அடிக்கும் அட்லீ! இதை நோட் பண்ணீங்களா?
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, தற்போது பான் இந்தியா இயக்குனராக உயர்ந்திருக்கிறார். அவர் படங்களுக்கும் ஷங்கர் படங்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி பார்க்கலாம்.

Director Atlee Copy Shankar Strategy : சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட இயக்குனர்களில் அட்லீயும் (Atlee) ஒருவர். இயக்குனர் ஷங்கரிடம் ரோபோ மற்றும் நண்பன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, அதன் பின்னர் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இதையடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் (Bigil) என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, பின்னர் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். அங்கு முதல் படமே ஷாருக்கானை வைத்து இயக்கி ஆயிரம் கோடி வசூலையும் அள்ளினார்.
Shankar, Atlee
அட்லீயின் அசுர வளர்ச்சி
5 படம் மட்டுமே இயக்கி உள்ள அட்லீ தன்னுடைய 6வது படத்திற்காக ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக உருவெடுத்துள்ளார். ராஜமவுலிக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்றால் அது அட்லீ தான். அட்லீயின் குருநாதரான ஷங்கரே ஒரு படத்துக்கு ரூ.50 கோடி தான் சம்பளம் வாங்குகிறார். அவரைவிட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி வருகிறார் அட்லீ. அவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள சையின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படியுங்கள்... VFX-க்கே 250 கோடி! அட்லீயிடம் அள்ளிக் கொடுத்த சன் பிக்சர்ஸ்; பட்ஜெட்டே இத்தனை கோடியா?
Atlee vs Shankar
ஷங்கர் வழியில் அட்லீ
இயக்குனர் அட்லீ, ஷங்கரை காப்பியடித்து தான் குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார் என நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இயக்குனர் ஷங்கர் (Director Shankar) தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் காதல் படத்தை இயக்கினார். அட்லீ இயக்குனராக எண்ட்ரி கொடுத்ததே ராஜா ராணி என்கிற காதல் படத்தின் மூலம் தான். அதேபோல் ஷங்கர் மெல்ல மெல்ல சமூக கருத்துள்ள கமர்ஷியல் படங்களை எடுக்க தொடங்கினார்.
அட்லீயும் தெறி படத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றியும், மெர்சலில் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல் பற்றியும், பிகில் படத்தில் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பெண்கள் பற்றியும், ஜவானில் விவசாய பிரச்சனை என தொடர்ந்து சமூக கருத்துள்ள படங்களை கொடுத்து தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார்.
Atlee Mentor Shankar
குருவை காப்பியடிக்கும் சிஷ்யன்
இதில் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், ஷங்கர் செய்த தவறுகளையெல்லாம் அட்லீ செய்யவில்லை. உச்ச நடிகர்களை வைத்து படம் இயக்கி கொண்டிருக்கும்போதே திடீரென புதுமுகங்களை வைத்து பாய்ஸ் என்கிற படத்தை இயக்கினார் ஷங்கர். அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் அட்லீ அதுபோன்ற ரிஸ்கை எடுக்கவில்லை.
தற்போது அடுத்ததாக ஷங்கரைப் போல் ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தை கொடுக்க ரெடியாகி வருகிறார் அட்லீ. ஷங்கர் ரஜினியை வைத்து கலாநிதி மாறன் தயாரிப்பில் எந்திரன் என்கிற சயின்ஸ் பிக்சன் படத்தை கொடுத்து பிரம்மிப்பூட்டியதை போல், அதே கலாநிதி மாறன் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ தற்போது சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்க உள்ளார். இது இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அட்லீ படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - எவ்வளவு தெரியுமா?