- Home
- Cinema
- Lakme Fashion Week 2023:மின்னும் கத்தரிப்பூ நிற உடையில் இடுப்ப வளைச்சு, நெளிச்சு போஸ் கொடுத்த அதியா ஷெட்டி!
Lakme Fashion Week 2023:மின்னும் கத்தரிப்பூ நிற உடையில் இடுப்ப வளைச்சு, நெளிச்சு போஸ் கொடுத்த அதியா ஷெட்டி!
பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி, ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா வடிவமைத்த ஆடைகளை அணிந்து வந்து ராம்ப் வாக் செய்துள்ளார்.

லேக்மி ஃபேஷன் வீக் 2023
மிக பிரபலமான ஃபேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று லேக்மி ஃபேஷன் வீக். ஒவ்வொரு ஆண்டும் லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆடை வடிவமைப்பாளர்களும் தங்களது ஆடை வடிவமைப்புகளை மாடல்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு அணிய செய்வார்கள்.
லேக்மி ஃபேஷன் வீக் 2023
ஃபேஷன் டிசைனர் வடிவமைக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பிரபலங்கள் பலரும் ராம்ப் வாக் செய்வார்கள். அப்படியொரு நிகழ்ச்சியைத் தான், லேக்மி ஃபேஷன் நிறுவனம் நடத்தி வருகிறது.
லேக்மி ஃபேஷன் வீக் 2023
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் இந்த ஆண்டுக்கான லேக்மி ஃபேஷன் வீக் 2023 கடந்த 9 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
லேக்மி ஃபேஷன் வீக் 2023 - அதியா ஷெட்டி
இதில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் வித விதமான ஆடைகளில் வந்து கவர்ச்சியாகவும், செகஸியாகவும் வ்ந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.
லேக்மி ஃபேஷன் வீக் 2023 - அதியா ஷெட்டி
இந்த லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, சோனாக்ஷி சின்ஹா, ஷோபிதா துலிபாலா, சுஷ்மிதா சென், டையானா பென்டி, டாரா சுதாரியா, ஷில்பா ஷெட்டி, சன்யா மல்ஹோத்ரா என்று ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை வெகுவாக அசத்தியுள்ளனர்.
ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா
அந்த வகையில், அண்மையில் திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டி பிரபல ஆடை வடிவமைப்பாளரான நம்ரதா ஜோஷிபுராவின் கை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்துள்ளார். அவரது உடல் வடிவமைப்புக்கும், உயரத்திற்கும் ஏற்ப ஆடைகளை கச்சிதமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா
பிகாம் பிரிவில் பட்டம் பெற்றுள்ள நம்ரதா ஜோஷிபுரா, தனது கல்லூரி வாழ்க்கையில் ராஜேஷ் பிரதாப், மணிஷா அரோரா, பயல் பிரதாப் என்று எண்ணற்ற ஆடை வடிவமைப்பாளர்களை கண்டுள்ளார். இவர்கள் எல்லோரும், உலகெங்கிலும் வெற்றிகரமான ஆடை வடிவமைப்பாளர்களாக திகழ்கின்றனர்.
ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா
மூத்த ஆடை வடிவமைப்பாளரான சுனீத் வர்மா உடன் இணைந்து 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சொந்த பெயரிடப்பட்ட லேபிளைத் தொடங்கியுள்ளார்.
ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா
திருமணத்திற்குப் பிறகு நியூயார்க் சென்ற நம்ரதா, கடந்த 2004 ஆம் ஆண்டில் முதல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு வந்தார். இது, 2 டிசைனர் கொண்ட ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி. அதில் ஒருவர் தான் சப்யாசாச்சி முகர்ஜி.
அதியா ஷெட்டி - ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா
தனது வடிவமைப்பு அழகியலை நவீனத்தை கொண்டாடுவதில் முழு கவனம் செலுத்தினார். மார்க் ஜாகோப்ஸ், டிரைஸ் வென் நோட்டன், பாரிசியன் லேபிள் 'வீட்மெண்ட்ஸ் ஆகியோர் தான் சர்வதேச ஆடை வடிவைமைப்பாளர். இவர்கள் தான் ஜோஷிபுராவுக்கு மிகவும் பிடித்தமான ஆடை வடிவமைப்பாளர்கள். ஆப்ரகாம் மற்றும் தாக்கூர் ஆகிய இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் நம்ரதாவுக்கு மிகவும் பிடித்தமான ஆடை வடிவமைப்பாளர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.