ஆசியாவில் அதிக சம்பளம் சம்பளம் வாங்கும் ஒரே தென்னிந்திய நடிகர்; யார் இவர்?
ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தென்னிந்திய நடிகர் ஒருவர் முதலிடத்தில் உள்ளார். தற்போது ஷாருக்கான், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், பிரபாஸ் போன்றோரை முந்தியுள்ளார்.

Most Expensive Actor in Asia
திரையுலகில் பிரபலமானவர்களில் சிலர் அதிக சம்பளம் பெறுகிறார்கள். இன்று 72 வயதான ஒரு நடிகர் அதிக சம்பளம் வாங்குகிறார். ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர்தான் முதலிடம் வகிக்கிறார். பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் பல நடிகர்கள் ஒரு படத்திற்கு நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகிறார்கள்.
ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்
தலைவா என்றும், தலைவர் என்றும் அழைக்கப்படும் ரஜினிகாந்த் முதலிடத்தில் உள்ளார். நடிப்பு, எளிமை ஆகியவற்றால் ரஜினியைப் பலரும் விரும்புகின்றனர். 1950 டிசம்பர் 12 அன்று ரஜினி பிறந்தார். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் காயக்வாட். பேருந்து நடத்துநர் உட்பட பல சிறு வேலைகளைச் செய்த ரஜினி இன்று இந்தியத் திரையுலகின் ஒரு ஜாம்பவானாக உள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
1975 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தமிழ் திரைப்படமான 'அபூர்வ ராகங்கள்' மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு 'பாட்ஷா', 'எந்திரன்', 'சிவாஜி: தி பாஸ்', 'ரோபோ 2.0', 'ஜெயிலர்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான், பிரபாஸ், கமல்ஹாசன், ஜாக்கிசான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதே போல ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திலும் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 70 வயதுக்கும் மேல் ஆன பிறகும், தற்போதைய இளைய நடிகர்களுக்கு போட்டியாக கடின உழைப்போடும், சுறுசுறுப்போடும் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.