ஒரே குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த 10 பேர்! கோலிவுட்டின் பிக்பாஸ் பேமிலி பற்றி தெரியுமா?
Kollywood Bigg Boss Family : 2 மனைவிகளை கொண்ட பிரபல நடிகரின் குடும்பத்தில் இருந்து மட்டும் 10 பேர் சினிமாவில் நடித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
Vijayakumar family
தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் கனவும் வந்த விஜயகுமார், தனக்கு எதிர்பார்த்த ஹீரோ சான்ஸ் கிடைக்காததால் தனக்கு வரும் குணச்சித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தமிழ் சினிமாவிற்கு அதிக நடிகர், நடிகைகளை கொடுத்தது விஜயகுமார் குடும்பம் தான். இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் மூத்த மனைவியின் பெயர் முத்துக்கண்ணு, இரண்டாவது மனைவியின் பெயர் மஞ்சுளா. இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
vijayakumar first wife muthukannu
விஜயகுமாரின் முதல் மனைவிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என மூன்று வாரிசுகள் உண்டு. அதேபோல் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கும் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உண்டு. இவர் விஜய்குமாருக்கு அடுத்தபடியாக அவரது குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தது அவரது மகன் அருண் விஜய் தான். அவருக்கு ஆரம்ப காலகட்டம் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருகிறார்.
Vijayakumar Second Wife Manjula
விஜயகுமார் குடும்பத்தில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் அதிகம். விஜயகுமாரின் இரண்டாவது மனைவி ஒரு ஹீரோயின் தான். அதேபோல் விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா விஜயகுமார் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். இதையடுத்து வனிதா விஜயகுமார் விஜய், ராஜ்கிரண் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல் அவரின் இளைய மகள்களான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியும் திருமணத்துக்கு முன்பு வரை ஹீரோயின்களாக நடித்தனர்.
இதையும் படியுங்கள்... பிரமாண்ட வீடு; ராஜ வாழ்க்கை வாழும் அப்பாவுக்கு இரண்டு மனைவிகளோடு சிலை வைத்த முன்னணி ஹீரோ!
Vijayakumar kids
விஜயகுமார் பேமிலியில் இருந்து லேட்டஸ்டாக அறிமுகமாகி இருக்கும் ஹீரோயின் ஜோவிகா. வனிதாவின் மகளான இவர் பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தற்போது சினிமாவில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். விஜயகுமாரின் மகள்களின் சினிமா பக்கமே தலைகாட்டாதவர் என்றால் அது அனிதா தான். இவருக்கு பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் மருத்துவம் படித்து வந்ததால் அதில் நடிக்க மறுத்துவிட்டார் அனிதா.
Vijayakumar Daughters
விஜயகுமார் பேமிலியில் ஹீரோக்களும் சிலர் உள்ளனர். விஜயகுமாரின் மகன் அருண் விஜய் ஹீரோவாக கலக்கி வருவதைப் போல், வனிதாவின் மகன் ஸ்ரீஹரியும் பிரபுசாலமன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய், ஓ மை டாக் என்கிற படத்தில் நடித்திருந்தார். இதுதவிர விஜயகுமார் குடும்பத்தில் இயக்குனர்களும் இருக்கிறார்கள். விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவின் கணவர் ஹரி கோலிவுட்டில் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக இருக்கிறார். அதேபோல் ஹரியின் மகனும் சினிமாவில் இயக்குனராக முயற்சித்து வருகிறார். அவர் இயக்கிய குறும்படம் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! வனிதா விஜயகுமார் எமோஷ்னல் பகிர்வு!