அருண் விஜய் ரசிகர்கள் குஷியோ குஷி 'ரெட்ட தல' ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு!
Arun Vijay starring Retta Thala Gets a Release Date: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்ட தல” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

அருண் விஜய் படங்கள்:
நடிகர் அருண் விஜய் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி, கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'வணங்கான்' திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அருண் விஜய் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, உருவான படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
ரெட்ட தல ரிலீஸ் தேதி:
'ரெட்ட தல' என பெயரிடப்பட்ட இந்த படத்தை, சிவகார்த்திகேயனை வைத்து “மான் கராத்தே” படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. அதன்படி 'ரெட்ட தல' திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது.
இரட்டை வேடத்தில் அருண் விஜய்:
அருண் விஜய் நடித்துள்ள இந்த படம், முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகி உள்ளது. மேலும் முதல் முறையாக அருண் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் செம்ம ஹாப்பி:
இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி மற்றும் தான்யா ரவிச்சந்திரன், நடிக்கின்றனர். மேலும் ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துளள்னர். விரைவில் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதையும் அறிவித்துள்ளனர். அருண் விஜய் படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.