வணங்கான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா? மாற்றுத்திறனாளியாக மாஸ் காட்டிய அருண் விஜய்!
Vanangaan Box Office Collection Day 4 Report : அருண் விஜய் நடிப்பில் திரைக்கு வந்த வணங்கான் படம் 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
Vanangaan Box Office Collection Day 4 Report
Vanangaan Box Office Collection Day 4 Report : எல்லா படைப்புகளையும் வித்தியாசமாக கொடுக்கும் இயக்குநர்களில் அதிக பிரபலம் இயக்குநர் பாலா. சேதுவில் ஆரம்பித்து இப்போது வணங்கான் வரையில் தனது எல்லா படைப்புகளையும் வித்தியாசமாக எடுத்து கொடுத்து பல விருதுகளை குவித்திருக்கிறார். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா என்று எல்லா படங்களையும் வித்தியாசமான கதையில் கொடுத்திருந்தார்.
Vanangaan Box Office Collection Day 4 Report
ஆனால், என்ன ஹீரோவை ஹீரோவாக காட்டியிருக்க மாட்டார். சேது படமாக இருந்தாலும் சரி, பரதேசி, பிதாமகன் என்று எந்த படமாக இருந்தாலும் சரி எல்லா படத்திலேயும் ஹீரோவை எந்தவித மேக்கப்பும் இல்லாமல் கிழிந்த, ஒரு சாதாரண உடையில் தான் நடிக்க வைத்திருப்பார். அப்படி தான் வணங்கான் படத்திலேயும் நடிகர் அருண் விஜய்யை காட்டியிருப்பார். வணங்கான் படத்தில் அருண் விஜய் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் காதலி ஒருவர். கண்டிப்புடன் பாதுகாக்கும் தங்கை ஒருவர். அதையும் தாண்டி ஆதரவற்ற பார்வையற்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய படம் தான் வணங்கான்.
Vanangaan Collection Day 4 Report
இது போன்று கதைகளை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அதையே வேறுபட்ட கோணத்தில் காட்டியிருப்பார். கதை ஒன்று காட்சி வேறு என்று சொல்லும் அளவிற்கு பாலாவின் படம் இருந்தது. இது கிட்டத்தட்ட நான் கடவுள் படம் மாதிரி தான். வணங்கான் முதல் பாதியை விட 2ஆம் பாதி சற்று வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. கடைசியில் ரசிகர்களை அழ வைக்க வேண்டும் என்பதற்காக தங்கை கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்வது போன்று காட்டியிருப்பார். ஆனால், அதெல்லாம் தேவையற்ற காட்சிகள் என்று தோன்றும்.
Vanangaan, Arun Vijay, Vanangaan Box Office Collection
ஆனால், இந்தப் படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு பிரம்மாதம். பாலா தனது படத்தி ஹீரோவை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் காட்டுவார் என்பது இந்த படத்தின் மூலமாக உண்மையாகிறது. விக்ரமுக்கு பிறகு இந்தளவிற்கு மெனக்கெட்டு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் அருண் விஜய். என்னை அறிந்தால் படத்திற்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடும் ஒரு படமாக அருண் விஜய்க்கு வணங்கான் படம் இருந்தது. ஆனால், கலெக்ஷனில் கொஞ்சம் குறைவு தான். முதல் நாளில் ரூ.1.5 கோடி வசூலித்திருந்த நிலையில் 2ஆவது நாளில் ரூ.2 கோடி வசூல் அள்ளியது. ஆனால், 3ஆவது நாளில் ரூ.1 கோடி என்று மொத்தமாக ரூ.4.5 கோடி வசூல் குவித்துள்ளது. இப்போது 4ஆவது நாளான இன்று பொங்கல் விடுமுறை என்பதால் எப்படியும் ரூ.2 கோடிக்கு குறையாமல் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Vanangaan Box Office Collection
இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ரிதா, ரோஷ்னி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி, சாயா தேவி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் தான் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதில் பாலா, அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ், ரிதா, சுரேஷ் காமாட்சி ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.