தளபதி 67 படத்தில் மொத்தம் 4 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள 67 ஆவது படத்தில், நடிக்க உள்ள நான்கு வில்லன்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளது. நேற்றைய தினம் கூட, நடிகர் ஸ்ரீமன் 'வாரிசு' படத்தின் டப்பிங் அணிகளை முடிவு செய்து விட்டதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இந்த படத்தின் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க... தளபதி விஜய், மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா, மற்றும் லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு ஓய்வுக்காக சென்று வந்த பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள, படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: மீண்டும் இணையும் மங்காத்தா காம்போ... விஜய்யை தொடர்ந்து அஜித் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய திரிஷா..!
'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதால் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் அவ்வப்போது இந்த படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில், தளபதி 67 படத்தில் மட்டும் மொத்தம் 4 வில்லன்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே... அர்ஜுன், இயக்குனர் கவுதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த லிஸ்டில் மிஷ்கினும் இடம்பிடித்துள்ளார். எனவே இந்த படத்தில் மொத்தம் 4 வில்லன்கள் நடிக்க உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்: பாக்ஸ் ஆபிஸில் கல்லாகட்டும் காந்தாரா... வசூலில் பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளி சாதனை