மீண்டும் இணையும் மங்காத்தா காம்போ... விஜய்யை தொடர்ந்து அஜித் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய திரிஷா..!
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் மீண்டும் பிசியான நடிகையாக மாறி உள்ள திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்ததன் மூலம் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி உள்ளார் நடிகை திரிஷா. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் செம்ம ஹாப்பியாக உள்ளாராம் திரிஷா.
அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் ஹீரோயினாக நடிக்கவும் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷுட்டிங்கும் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... பணக்கஷ்டத்தால் காரை விற்ற ஆல்யாவின் கணவர் சஞ்சீவ்..செய்தி கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்
இந்நிலையில், புதிய தகவலாக நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்திலும் திரிஷாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தின் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சர்ப்ரைஸாக திரிஷாவின் பெயர் அடிபடுகிறது. அஜித்தும் திரிஷாவும் ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் கல்லாகட்டும் காந்தாரா... வசூலில் பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளி சாதனை