வாவ்..மாஸ் கிளப்பும் விஜயின் அரபிக் குத்து..எத்தனை மில்லியன் வியூஸ் தெரியுமா?
பீஸ்ட் ஆபத்திலிருந்து முதல் சிங்குளாக அரபிக் குத்து வெளியாகியுள்ளது...இந்த பாடலை விஜய் ரசிகர்கள் மாஸாக கொண்டாடி வருகின்றனர்..

arabic kuthu
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைக்கிறார்.
arabic kuthu
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம்அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
arabic kuthu
வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
arabic kuthu
பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடலின் புரோமோ கடந்த சில தினங்களுக்கு முன் வித்தியாசமான முறையில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரின் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.
arabic kuthu
அந்த எதிர்பார்ப்பை பூர்த்து செய்யும் விதமாக பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக இப்பாடல் வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் வெளியானது முதலே, பலரது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் 'ஹலமதிஅபிபு' தான் பரவலாக ஒலித்து கொண்டிருக்கிறது.
arabic kuthu
இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது.
arabic kuthu
பொதுவாக ஒரு பாடல் ட்ரெண்டானாலே அதனை பலரும் ரீல்ஸ் செய்ய தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' பாடலை மட்டும் ரசிகர்கள் சும்மாவா விடுவார்கள்.
arabic kuthu
இந்நிலையில் பாடல் வெளியாகி வெறும் 12 நாட்களில் அரபிக் குத்து 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது...