என்ன ஏ.ஆர்.ரகுமான், எம்.எஸ் சுப்புலக்ஷ்மி காம்போவில் ஒரு பாட்டு உருவாகியிருக்கா? என்ன பாடல் அது தெரியுமா?
M.S. Subbulakshmi & A.R Rahman - இந்திய இசை வரலாற்றில், மிக முக்கியமான இரண்டு ஜாம்பவான்களில் ரகுமானுக்கு மறைந்த மாமேதை சுப்புலெட்சுமிக்கும் மாபெரும் இடமுண்டு.
Singer Subbulakshmi
கர்நாடக இசை மற்றும் திரையிசை பாடகியான மறைந்த மாமேதை எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு உலக அரங்கத்திலேயே எந்த விதமான அறிமுகமும் தேவையில்லை. கடந்த 1916ம் ஆண்டு மதுரை மாகாணத்தில் பிறந்தவர் அவர். இளம் வயதிலேயே தன்னுடைய தாய் சண்முகவடிவு அவர்களிடம் தான் கர்நாடக இசையை அவர் பயின்றார். கடந்த 1929ம் ஆண்டு அப்போதைய "மெட்ராஸ் மியூசிக் அகாடமியில்" தான் அவரது முதல் அரங்கேற்றம் நடந்தது.
அப்போது அவருக்கு வயது வெறும் 13, கடவுள்களின் பெயரால் பாடப்படும் பஜனைகளை பாடுவதில் வல்லவர் தான் சுப்புலட்சுமி. மிக சிறிய வயதிலேயே லண்டன், நியூயார்க், கனடா மட்டுமல்லாமல் பல மேலை நாடுகளுக்கு சென்று இசை கச்சேரிகளை நடத்தியவர். 1963ம் ஆண்டு நடந்த "எடிம்பர்க் இன்டர்நேஷனல் இசை விழா, 1966ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த ஒரு மிகப்பெரிய இசை நிகழ்ச்சி, லண்டனில் உள்ள "ராயல் ஆல்பர்ட் ஹாலில்" கடந்த 1982ம் ஆண்டு நடந்த இசை கச்சேரி மற்றும் மாஸ்கோவில் 1987ம் ஆண்டு நடந்த ஒரு இசைக் கச்சேரி என்று அவர் குரலில் மின்னிய கச்சேரிகள் ஏறலாம்.
MS Subbulakshmi Songs
பல்லாயிரம் மேடை கச்சேரிகளில் அவர் பங்கேற்றிருந்தாலும், தமிழ் சினிமாக்களிலும் குறைந்த அளவிலான பாடல்களை அவர் பாடியிருக்கிறார். 1938ம் ஆண்டு தமிழில் வெளியான "ஸேவாஸதனம்" என்ற படத்தில் தான் முதல் முறையாக அவர் பாடினார். மேலும் 1940ம் ஆண்டு வெளியான "சகுந்தலை", 1941ம் ஆண்டு வெளியான "சாவித்திரி", 1945ம் ஆண்டு வெளியான "மீரா" மற்றும் 1947ம் ஆண்டு வெளியான "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" உள்ளிட்ட படங்களில் அவர் பாடல்களை பாடி இருக்கிறார். ஹிந்தி மொழியிலும் "மீராபாய்" என்ற படத்தில் சில பாடல்களை பாடியுள்ள எம்.எஸ் சுப்புலட்சுமி அதன் பிறகு திரைப்படங்களுக்காக எந்த பாடல்களையும் பாடியதில்லை.
1930 ஆம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை சுமார் 67 ஆண்டுகள் இவருடைய இசை பயணம் தொடர்ந்தது. தமிழக இசை வரலாற்றில் மிகப்பெரிய புகழோடு வலம் வந்த எம்.எஸ் சுபலட்சுமி கடந்த 2004 ஆம் ஆண்டு தனது 88-வது வயதில் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி சென்னையில் காலமானார்.
AR Rahman
சரி 1947ம் ஆண்டுக்கு பிறகு எம்.எஸ். சுப்புலக்ஷ்மி திரைப்படங்களில் பாடவில்லை என்றால், பின் எப்படி 1992ம் ஆண்டு ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசை புயல் ஏ.ஆர் ரகுமானோடு இணைந்து ஒரு பாடலை அவர் உருவாக்கி இருக்க முடியும்? என்ற கேள்வி இப்போது உங்கள் மனதில் எழுவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் உண்மையில் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த ஒரு படத்தில் இடம்பெற்ற பாடலில் எம்.எஸ் சுப்புலட்சுமி குரல் ஒளிந்துள்ளது. அதுவும் தெய்வத்தை நினைத்து எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடிய ஒரு டிவோஷனல் பாடலை, மிக கச்சிதமாக ஒரு காதல் பாடலுடன் இணைத்து மாஸ் காட்டியுள்ளார் ரகுமான்.
O Kadhal kanmani
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் "ஓ காதல் கண்மணி". பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தில் தான் அந்த மேஜிக்கை செய்து அசத்தியிருக்கிறார் ஏ.ஆர் ரகுமான். நாயகன் துல்கர் சல்மான் மற்றும் நாயகி நித்யா மேனன் ஆகிய இருவரும் இணைந்து பாடும் ஒரு காதல் பாடலுக்கு இடையே, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடிய "Bhavamulona" என்ற ஆன்மீக பாடலை ரீ-மாஸ்டர் செய்து இணைந்திருப்பர்.
தங்கலான் உட்பட 6 தமிழ் படமும் அவுட்... ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிந்தி படம் எது தெரியுமா?