வாரிசை தயார் செய்த ஏ.ஆர் ரகுமான்.. இசை புயலின் மகன் குறித்த தகவல்கள்..
அமீன் தனது இன்ஸ்டாகிராமில் ஏஆர் ரஹ்மானுடன் பிறந்தநாளை முன்னிட்டு தந்தை - மகன் இருவரும் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து "உலகின் சிறந்த அப்பா #iloveyou3000 க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.

A.R.Ameen
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு தம்பதியினருக்கு கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், ரஹிமா ரஹ்மான் என்னும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஏ.ஆர். அமீன் இளம் வயது பாடகராக வளம் வருகிறார்.
A.R.Ameen
சகோ வா – இப்பாடல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒன்று தான். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் பாடிய முதல் பாப் சிங்கிள் வீடியோ பாடல் இது. பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தந்தையும், மகனும் சேர்ந்து இந்த பாடல் வீடியோவை தயாரித்துள்ளனர்.
A.R.Ameen
அடுத்து அப்பாவுடனும், தனித்தும் சில ஆல்பங்களை தயாரித்து இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.அமீன். சமீபத்தில் ஹானஸ்டி என்கிற ஆல்பத்தை இசைத்திருந்தார். அப்பாவை போலவே இசைத்துறையில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
A.R.Ameen
அமீன் ரஹ்மான் ஓகே கண்மணி, ஓகே பங்காரம் தெலுங்கு படத்தில் ‘மவுலாமா வா சலிம்’என்ற பாடலை பாடியுள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷனின் நடிப்பில், ‘நிர்மலா கான்வெண்ட்’என்ற திரைப்படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலைப் பாடியுள்ளார்.
a.r.ameen
இசையமைப்பாளரும் பாடகருமான ஏ.ஆர்.ரஹ்மான் தனது பணி வாழ்க்கையின் படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். இவர் சமீபத்தில் தனது மகன் ஏஆர் அமீனின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
a.r.ameen
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வந்தாலும் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் அமீன் ஏ.ஆர்.ரஹ்மானை ஜெராக்ஸ் எடுத்ததை போல உருவத்தில் அப்படியே இருக்கிறார்.
A.R.Ameen
அமீன் தனது இன்ஸ்டாகிராமில் ஏஆர் ரஹ்மானுடன் ஒரு நிகழ்வாகத் தோன்றும் படத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் எழுதினார், "உலகின் சிறந்த அப்பா #iloveyou3000 க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்